சன் டே ஸ்பெஷல்.. மாஸ் படங்களை பக்காவாக இறக்கிய டிவி சேனல்கள்.. ட்விட்டரை கதறவிடும் ரசிகர்கள்!

சென்னை: லாக் டவுன் நேரத்தில் சினிமா தியேட்டர்கள் பூட்டிக் கிடப்பதால், சின்னத்திரைகளுக்கு அடித்தது ஜாக்பாட்.

Recommended Video

Wow! விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்| Jason Sanjay | Lock Down

தினமும் புதிய புதிய படங்களாகவும், எவர்க்ரீன் சூப்பர் ஹிட் படங்களாகவும் போட்டு கல்லா கட்டி வருகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று சன் டே ஸ்பெஷலாக பல சூப்பர் ஹிட் படங்களை ஒவ்வொரு டிவி சேனல்களும் களமிறக்கி ரசிகர்களை டிவிக்கு முன் உட்கார வைத்திருக்கின்றன.

சன் டே ஸ்பெஷல்

சன் டே ஸ்பெஷல்

ஞாயிற்றுக் கிழமைக்கான அந்தஸ்த்தே இந்த லாக் டவுனில் மறக்கப்பட்டாலும், சன் டே ஸ்பெஷல் படங்களை இறக்குவதை டிவி சேனல்கள் என்றுமே மறப்பதில்லை. ரசிகர்களை டிவி எனும் மாயப் பெட்டிக்கு முன் கட்டி வைக்க, கத்தி, எந்திரன், கைதி, சிங்கம் 2, 2.0 என பல மெகா ஹிட் படங்களை ஒவ்வொரு டிவி சேனல்களும் இன்று களமிறக்கி உள்ளன.

சிங்கம் 2

சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு சூர்யாவின் சிங்கம் 2 படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. காலை முதலே சூர்யா ரசிகர்களுக்கு டிரெண்டிங் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் வெளியான சிங்கம் 2 மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில், #Singam2 என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சரியான போட்டி

அதே நேரத்தில் விஜய் டிவியில் இன்று காலை ஒளிபரப்பான நடிகர் கார்த்தியின் கைதி படத்தின் ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு மிஷின் கன்னுடன் பட்டாசாக வெடித்த கைதி படம் இன்றைய சன் டே ஸ்பெஷல் ஒளிபரப்பில் சரியான போட்டி.

டபுள் தமாக்கா

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஞாயிற்றுக் கிழமை டபுள் தமாக்கா கிடைத்திருக்கிறது. மதியம் 2.30 மணிக்கு சன் டிவியில் எந்திரன் படமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழில் 2.0 திரைப்படமும் டி.ஆர்.பி.யில் அசுர வேட்டை நடத்தப் போகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த இரு படங்களையும் கொண்டாடும் விதமாக #SundayWithCHITTIand2POINT0 என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தளபதி இல்லாமலா

சன் டே ஸ்பெஷல் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி படங்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் டிரெண்டிங் நடத்தும் போது, அதன் டாப் டிரெண்டிங்கில் தளபதி விஜய் படம் இல்லாமல் இருக்குமா என்ன? ஜெயா டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான கத்தி படமும் டி.ஆர்.பியில் தெறிக்க விட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X