twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்றைய ரிலீஸ்... பட்டைய கிளப்பணும் பாண்டியா, அமரகாவியம்

    By Shankar
    |

    இன்று வெள்ளிக்கிழமை பட்டைய கிளப்பணும் பாண்டியா, அமர காவியம் உள்பட ஆறு நேரடிப் படங்கள் வெளியாகின்றன.

    வாரந்தோறும் சராசரியாக நான்கிலிருந்து ஐந்து படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் நல்ல படங்கள் கூட தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லது கவனிக்கப்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த வாரம் ஆறு படங்கள்.

    பட்டைய கிளப்பணும் பாண்டியா

    பட்டைய கிளப்பணும் பாண்டியா

    விதார்த், சூரி, மனிஷா யாதவ் நடித்துள்ள இந்தப் படத்தை எஸ் பி ராஜ்குமார் இயக்கியுள்ளார். சுராவுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. கிராமத்துக் காதலை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

    அமர காவியம்

    அமர காவியம்

    ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள படம் அமர காவியம். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா நடித்துள்ளார். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.

    பொறியாளன்

    பொறியாளன்

    வெற்றிமாறன் வழங்க, மணிமாறன் இயக்கியுள்ள படம் பொறியாளன். தாணு குமார் தயாரித்துள்ளார்.

    காதலைத் தவிர வேறொன்றுமில்லை

    காதலைத் தவிர வேறொன்றுமில்லை

    நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்கத்தில் வெளியாகும் படம் காதலைத் தவிர வேறொன்றுமில்லை. யுவன், சரண்யா நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை. இந்தப் படத்துக்காக தன் பெயரை செல்வபாரதி குமாரசாமி என மாற்றிக் கொண்டுள்ளார்.

    வலியுடன் ஒரு காதல்

    வலியுடன் ஒரு காதல்

    சிஎம் சஞ்சீவன் இயக்கியுள்ள வலியுடன் ஒரு காதல் படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கவுரி நடித்துள்ளனர். ஆர் ரீத்தா தயாரித்துள்ளார்.

    கள்ளச்சாவி

    கள்ளச்சாவி

    ராஜேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகும் படம் இந்த கள்ளச்சாவி. வர்ஷா நடித்துள்ளார். ஏ சான்றிதழுடன் வந்துள்ள படம் இது.

    English summary
    There are 6 straight Tamil movies including Pattayai Kilappanum Pandiya releasing Today, Sep 5, 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X