இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே... என்னென்ன படங்கள் ரிலீஸ்?
ஊரெங்கும் பரீட்சை ஜூரம்... கேபிள், டிஷ் கனெக்ஷனைக் கூட மக்கள் துண்டித்துவிட்டு, சீரியஸாக இருக்கிற நேரம்.
ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமை 5 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. இரண்டு டப்பிங் படங்கள் வேறு.

ஆயிரத்தில் ஒருவன்
இவற்றில் மிகப்பெரிய வெளியீடாக வருவது எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன். புதிய படங்களுக்குக் கூட இல்லாத பப்ளிசிட்டி மற்றும் வரவேற்புடன் இன்று 100-க்கும் மேற்பட்ட நல்ல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

ஜெயலலிதா
இந்தப் படத்தின் வெளியீட்டையொட்டி, முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ள பாராட்டு மற்றும் வாழ்த்துக் கடிதம் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 49 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆயிரத்தில் ஒருவன் வசூலில் புது சாதனைப் படைக்கும் என நம்பப்படுகிறது.

காதல் சொல்ல ஆசை
இன்று வெளியாகும் புதிய படங்களுள் ஒன்று இது. முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக், மது நடித்துள்ள படம் இது. தமிழ் சீனு இயக்கியுள்ளார். விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.

ஒரு மோதல் ஒரு காதல்
கீர்த்திகுமார் இயக்கத்தில் விவேக் - மேகா நடித்துள்ள படம் ஒரு மோதல் ஒரு காதல். பஞ்சாபி பெண்ணை தமிழ்ப் பையன் காதலித்து கைப்பிடிக்கும் கதை.

ஆதியும் அந்தமும்
இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். கவுசிக் இயக்கத்தில் அஜய், மித்தாலி அகர்வால், கவிதா சீனிவாஸ் நடித்துள்ள படம்.

மறுமுகம்
கமல் சுப்பிரமணியம் இயக்கத்தில், சஞ்சய் டாங்கி தயாரித்துள்ள படம் மறுமுகம். டேனியல் பாலாஜி - ப்ரீத்தி நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்.

நான் ஸ்டாப்
இவை தவிர, நான் ஸ்டாப் என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. பேட்டில் ஆப் டேம்டு என்ற படமும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











