தனுஷ் மேனேஜர் சர்ச்சை முதல் சுனிதாவின் கவர்ச்சி போஸ் வரை.. டாப் 5 சினிமா செய்திகள்!
சென்னை: தனுஷ் மேனேஜர் குறித்து சர்ச்சை, அதற்கு பயில்வான் ரங்கநாதனின் கருத்து, நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நடந்த டாப் ஐந்து முக்கியமான செய்திகளை இந்த செய்தியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை மான்யா விளக்கம்: வானத்தை போல சீரியல் நடிகை தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ், வாய்ப்பு தருவதாக அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார் என பேட்டியில் கூறியிருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் பேசு பொருளான நிலையில், அதுகுறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். முதலில் அந்த பேட்டியை பேட்டியை முழுமையாக பாருங்க. தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி பொய்யான ஒரு நபர் அப்படி செய்து இருக்கலாம் என்று தான் கூறி இருக்கிறேன். அந்த போன் நம்பரை தனுஷ் சார் டீமுக்கு அனுப்பி இருக்கிறேன். பேட்டியை முழுவதுமாக பார்க்காமல், பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என மான்யா ஆனந்த் கூறி இருக்கிறார்.

நடிகை சொல்வது பொய்: சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் குறித்து பேசி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், இது குறித்து பேட்டியளித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், தனுஷ் வளர்ந்து வரும் நடிகர் இல்லை, அவர் ஒரு டாப் நடிகர், அவரின் மேனேஜர் இப்படி பேசி இருக்கிறார் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. அவர்கள் பார்க்காத நடிகையா? அதுவும் சீரியல் நடிகையிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டார். அந்தப் பெண் தேவை இல்லாமல் தனக்கு புகழ் வர வேண்டும் என்பதற்காக எப்படி பேசுகிறார் என கூறியுள்ளார்.
மை லார்ட்: சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு கருடன், நந்தா, டூரிஸ்ட் பேமிலி, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மை லார்ட்' படத்தில் சசிக்குமார் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் சம்பளம்: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும், இப்படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும்.
சுனிதா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் சுனிதா கோகோய், இன்ஸ்டாகிராமில் அதீத கவர்ச்சியுடன் பகிர்ந்து இருக்கும் போட்டோஸ் இணையத்தை அசர வைத்துள்ளது. கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியாகவும், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி வேண்டாம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











