Today's Top 5 Cinema News for November 24th, நவம்பர் 24ந் தேதியான இன்று டாப் 5 சினிமா செய்திகள்

சென்னை: காஞ்சிபுரத்தில் விஜய் திமுக கடுமையாக விமர்சித்து பேசியது, இயக்குநருக்கு மெகா ஸ்டார் கொடுத்த பரிசு, பராசக்தி பட அப்டேட், என தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நடந்த டாப் ஐந்து முக்கியமான செய்திகளை இந்த செய்தியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விஜய்: காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மம் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது. உங்களை, நம்மை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நாடகமாடுபவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை. மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியத்தோடுதான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதனால்தான் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம் என்றார்.

Cinema News Top 5 cinema 5
Photo Credit:

விலை உயர்ந்த பரிசு: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குனர் அனில் ரவிபுடிக்கு பிறந்த நாளை முன்னிட்டு விலை உயர்ந்த வாட்சை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். அனில் ரவிபுடி, தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான "மன சங்கர வர பிரசாத் கரு" படத்தை இயக்கி வருகிறார் இதில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒடிடி ரிலீஸ்: நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியான ஆர்யன் கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் வரும் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல காந்தாரா சாப்டர்1 ஹிந்தி வெர்ஷனும் வரும் 27ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடித்த 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'என்ற இந்தி திரைப்படம் நவம்பர் 27 ந் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும். ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4வது சீசன் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5வது சீசன் முதல் பகுதி நவம்பர் 26ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. நிஜ வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து 'பார்ன் ஹங்கிரி' ஆவணத்திரைப்படம் நவம்பர் 28ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Cinema News Top 5 cinema 5
Photo Credit:

ரிவால்வர் ரீட்டா: நடிகை கீர்த்தி சுரேஷ், சத்குரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோ மட்டும் தி ரூட் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்தபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் வருகிற 28ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பராசக்தி: சுதாகொங்கிரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X