Top 5 Cinema: தனுஷ் கிசுகிசு முதல் அஜித் 64 அப்டேட் வரை.. டாப் 5 சினிமா செய்திகள்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிகையுடன் இணைத்து பேசப்படுவது, திரௌபதி 2 படத்தின் பர்ஸ்ட் லுக், அஜித் 64 திரைப்படத்தின் அப்டேட் என தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நடந்த டாப் ஐந்து முக்கியமான செய்திகளை இந்த செய்தியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தனுஷ் கிசுகிசு: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். தனுஷ் குறித்து எப்போதும் கிசுகிசு பரவி வரும் நிலையில், நடிகை மிருணாள் தாகூடன் தனுஷ் டேட்டிங் செய்வதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவின. ஆனால், 'சீதா ராமம்' புகழ் நடிகை மிருணாள் தாகூர், இதை மறுத்து இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். தற்போது, மிருணாள் தாகூர் தனது அடுத்த படமான 'தோ தீவானே ஷாஹர் மெய்ன்' நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசல் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. அதற்கு தனுஷ் கருத்து தெரிவித்து இருப்பதால், இருவரும் டேட்டிங் செய்து வருவதாக மீணடும் கிசுகிசு எழுந்துள்ளது.

Cinema News Top 5 cinema 5

அஜித் 64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தில் நடிகர் பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என கூறப்பட்டுவந்த நிலையில், அஜித் 64 திரைப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

லாக் டவுன்: லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் உள்ள திரைப்படம் 'லாக் டவுன்' திரைப்படம். இப்படம் கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

Cinema News Top 5 cinema 5

திரௌபதி 2: பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி. 2020 ஆம் ஆண்டு திரௌபதி என்ற படத்தை இயக்கினார்.இப்படம் சர்ச்சைக்குரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து எப்போது திரௌபதி 2 திரைப்படம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 'திரௌபதி 2' பட கதாநாயகியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதில், ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார்.

சர்வம் மாயா: இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள "சர்வம் மாயா" திரைப்படம், வரும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X