வாவ் செம.. 65 பாடகர்கள்.. 5 தேசிய மொழிகள்.. வெளியானது ஏ.ஆர். ரஹ்மானின் சுதந்திர தின பரிசு!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பு பரிசு வெளியாகி உள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசையமைத்த "தமிழா தமிழா" பாடலை 65 பாடகர்கள், 5 இந்திய தேசிய மொழிகளில் பாடி தொகுக்கப்பட்டு தற்போது சுதந்திர தின பரிசாக வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கி, ஹரிஹரன் வரை இந்த பாடலை பாடியுள்ளனர்.

மேலும், பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் பாடல்களை பாடிய 65 பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியும் அதனை வீடியோவாக பதிவு செய்தும், அனைத்தையும் ஒன்று சேர்த்து எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் முதல் பல பிரபலங்கள் இந்த பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
ஸ்ரீநிவாஸ், ராகுல் நம்பியார் மற்றும் ஆலப் ராஜா இந்த பாடலை ஒருங்கமைத்துள்ளனர்.
#TogetherAsOne எனும் ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வரும் இந்த பாடல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸின் யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு, இந்த லாக்டவுனில் வறுமையால் வாடி தவிக்கும் பின்னணி பாடகர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இந்த பாடலை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











