twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கங்கை அமரனை கௌரவிக்கும் ஒரு இசை நிகழ்ச்சி ...பல தமிழ் சங்கங்களின் கூட்டு முயற்சி !

    |

    டோக்கியோ : டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பாக முதல் முயற்சியாக "கிரேஸி கிரியேஷன்ஸ்" உடன் இணைந்து நடத்திய கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அளித்த ஒத்துழைப்பால் இணையத்தளம் மூலம் மிகவும் வரவேற்பை பெற்றது.

    தற்போது உலகெங்கும் மக்கள் "கொரோனாவால்" மனதளவில் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அந்த பாதிப்பில் இருந்து, சிறிதேனும் புத்துணர்வு பெறும் வகையில் உலக தமிழ்ச் சங்கங்களின் முயற்சியோடு இசையமைப்பாளர் கங்கை அமரனை கௌரவிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திரையுலக முன்னணி கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், உலககெங்கிலும் இருந்து, பல தமிழ்சங்கங்களைச் சார்ந்த பாடகர்களுடன் இணைந்து மனதை வருடும் பாடல்களோடு இந்நிகழ்ச்சியினை நடத்த உள்ளார்கள். உலக இசை தினத்தை முன்னிட்டு, உலகத் தமிழ் சங்கங்களுடன் இணைந்து இசையமைப்பாளர் கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம் இணைந்து செயல் பட இருக்கிறார்கள்

    ஏ.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. ஆவாஸ் அஞ்சிங்.. விவேக்கையே கலாய்ச்சுட்டாங்களே!ஏ.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. ஆவாஸ் அஞ்சிங்.. விவேக்கையே கலாய்ச்சுட்டாங்களே!

    உலக இசை தினம்

    உலக இசை தினம்

    அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் 21-ம் தேதி அன்று டோக்கியோ தமிழ்சங்கம் (Tokyo Tamil Sangam) சார்ந்த கணேசன் ஹரி நாராயணன், மலேசியாவை சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை விமரிசையாக நேரலையில் கொண்டாடவிருக்கிறது.

    புது முயற்சி

    புது முயற்சி

    கொரோனாவின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதிற்கு சிறிதளவில் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களின் மனதிற்கு, இதம் தரும் அளவிற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சில் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கு மேல் பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட கங்கை அமரன் கெளரவிக்கப்படுகிறார்.

    நேரலையில்

    நேரலையில்

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கங்கை அமரனுடன் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி பாடகர்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த பாடகர்கள் தங்கள் இசையுடன் நேரலையில் அவருடன் பயணிக்கிறார்கள்.

    இசை மகுடம்

    இசை மகுடம்

    இசை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஓர்இசை வேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணமாய் ஒரு மாபெரும் தவம் செய்த கலைஞனுக்கு இசையால் மகுடம் சூட்டும் வரமாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழு சொல்லி வருகிறது

    நேரடி ஒளிபரப்பு

    நேரடி ஒளிபரப்பு

    இந்நிகழ்ச்சி இந்திய நேரம் வரும் ஞாயிறு (21/6/2020) மாலை 4 மணிக்கு, மலேசியா நேரம் மாலை 6:30, ஜப்பானிய நேரம் இரவு 7:30 மணிக்கு டோக்கியோ தமிழ்ச் சங்கம், மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம், பொன்மாலை பொழுது UAE, தாய்லாந்து தமிழ்ச் சங்கம், இந்தோனிசியா தமிழ் சங்கம், தமிழர் INC, மெல்போர்ன், ஆஸ்திரேலியா மணிலா தமிழ்ச் சங்கம், டாமன் முத்தமிழ் மன்றம், UAE தமிழ்ச் சங்கம், ஸ்லவ் தமிழ்ச் சங்கம் UK, டிவின் லைட்ஸ் தமிழ் அசோசியேஷன் மின்னேஸ்டா USA, ஐ ஃபார் இந்தியா, UK, தமெனிக்கா TV, கலிபோஃர்னியா டிவி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உலக தமிழ் சங்கங்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் சாணக்யா யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பாகிறது

    ரசனையைத் தூண்டும்

    ரசனையைத் தூண்டும்

    கங்கை அமரன் போன்ற அனுபவம் மிக்க கலைஞர்களை சரியாக பயன் படுத்தி இசை சார்ந்த பல கேள்விகளை கேட்டு ரசிகர்கள் மகிழலாம் . அது மட்டும் அல்லாமல் இப்படி பட்ட நிகழ்ச்சிகளை மீண்டு மீண்டும் ரசிகனின் ரசனையை தூண்டும் வண்ணம் உள்ளது என்பதால் பல புதிய முயற்சிகளை செய்ய இருக்கிறார்கள்.

    English summary
    Tokyo tamil sangam Organised Function to honour Gangai amaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X