Actor Nani: கமலோட விருமாண்டி படம் ரொம்ப பிடிக்கும்.. அதை எப்படி பண்ணாருன்னே தெரியலை.. நானி வியப்பு!

சென்னை: நடிகர் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூர்யாஸ் சாட்டர்டே படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

படத்தின் நாயகன் நானியும் தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். படம் குறித்தும் சக நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை தன்னுடைய பிரமோஷன்களில் பேசி வருகிறார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியான நிலையில், எஸ்ஜே சூர்யா அதிகமாக ஸ்கோர் செய்துள்ளதை பார்க்க முடிந்தது. அவருடன் போட்டிப் போட்டு நானி நடித்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

Kamal haasan Virumandi Nani

நடிகர் நானி: வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் நானி. தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் நானி, பான் இந்தியா ஸ்டாராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நானா படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நானியின் 31வது படமாக சூர்யாஸ் சாட்டர்டே படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 29ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாஸ் சாட்டர்டே படம்: இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிலிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள சூர்யாஸ் சாட்டர்டே படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது சூர்யாஸ் சாட்டர்டே. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை டீம் வெளியிட்டு வருகின்றனர்.

மிரட்டலான வில்லன்: இந்த படத்தின் மூலம் டோலிவுட் ரசிகர்களையும் கவரும் வகையில் களமிறங்கியுள்ளார் நடிகர் எஸ்ஜே சூர்யா. இரக்கமற்ற போலீஸ் அதிகாரியாக இவர் ட்ரெய்லரில் மாஸ் காட்டியுள்ளார். இந்த படத்தில் எதிரெதிர் துருவங்களாக நிற்கும் இன்ஸ்பெக்டர் தயா மற்றும் சூர்யா இருவருக்குள் ஏற்படும் மோதலை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் ட்ரெய்லருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த படத்தின் பிரமோஷன்களுக்காக தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை நானி கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசனை பாராட்டிய நானி: அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து அவர் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் விருமாண்டி படம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ள நானி, விருமாண்டி படத்தில் கமல்ஹாசனின் போஸ்டர் தன்னுடைய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தில் கோர்ட் சீன் ஒன்றில் தூக்கத்தில் இருந்து கமல் எழுந்து நடிப்பதாக காட்சி அமைந்திருக்கும். அந்தக் காட்சியில் உண்மையாக தூங்கறது போலவே கமல் நடிச்சிருப்பார். அத எப்படி பண்ணாருன்னே தெரியலை என்று நானி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். ஆக்சனுக்கு மட்டுமின்றி நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நானி. அந்த வகையில் அவரை நடிகர் கமல்ஹாசன் வியப்பிற்கு உள்ளாகியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X