வாயில் பீடி.. கையில் சரக்கு.. மிரட்டலான லுக்கில் நானி.. தசரா டீசர் எப்படி இருக்கு!
சென்னை : தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள தசரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ்,சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர் நானி
நடிகர் நானி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பான் இந்தியா ஸ்டாராகவும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றன. இதில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது.

நானியின் தசரா
இந்த படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள படம் தசரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

மிரட்டலான டீசர்
இந்நிலையில், தசரா படத்தின் தமிழ் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், நானி முரட்டுத்தனமான லுக்குடன், தாடி, மீசை வைத்து அலறவிட்டுள்ளார். மேலும், டீசரின் ஆரம்பத்திலேயே, சரக்கு குடித்தபடி வரும் நானி, சரக்குக்கு நாங்க அடிமை இல்லை... ஊறிப்போன சம்பிரதாயம் என்று மாஸான வசனத்துடன் ஆட்டம் போட்டுள்ளார்.

வாயில் பீடி, கையில் சரக்கு
வாயில் பீடி, கையில் சரக்கு பாட்டிலுடன் சும்மா வேறமாதிரி இருக்கிறார் நானி. சற்று முன் வெளியான இந்த டீசர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அடிதடி ரத்தக்களறியாக உள்ள இந்த டீசரில் பெயருக்கு கூட கீர்த்தி சுரேஷை காட்டவில்லை. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











