தெலுங்கில் ரீமேக்காகும் தெறி... விஜய் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லியின் அட்டகாசமான இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தெறி. இதில், விஜய், மகேந்திரன், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த, இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

தெறி
விஜய்யின் அட்டகாசமான படங்களில் ஒன்று தெறி. இப்படத்தில் விஜய் பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரி, பிரியத்தைக் கொட்டும் காதலன் என்று மூன்று விதமான கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருப்பார். அதற்கு ஏற்றாற் போல பாடிலேங்வேஜிலும் மிரட்டி இருப்பார் விஜய்.

தனிமுத்திரை
ஒரு அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்ற வாளியைக் கண்டறியும் போலீஸ் அதிகாரி விஜயகுமாராக பட்டையை கிளப்பி இருப்பார். குற்றவாளியை பிடித்து கொன்று ஆக்ஷனில் தனி முத்திரை பதித்திருந்தார் விஜய். இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

வசூலில் சாதனை
அட்லியுடன் விஜய் கைகோத்த முதல் படமான தெறி 72 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 168 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த, இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

தெலுங்கில் ரீமேக்
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











