அந்த நடிகரை பார்த்தாலே எம்ஜிஆர் பயப்படுவாரா?.. ராஜேந்திர பிரசாத்தின் நக்கல்.. விளாசும் ரசிகர்கள்!

சென்னை: தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் ராஜேந்திர பிரசாத் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ் திரையுலகின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

பொதுவாகவே சினிமா மேடைகளில் ஒரு நடிகரை புகழ்ந்து பேசும் போது இன்னொரு நடிகரை சிலர் சிறுமைப்படுத்தி பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வதை பார்த்திருக்கிறோம். விஜய்யை வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் என சொல்லி சரத்குமார் மிகப்பெரிய எதிர்ப்பை ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

Tollywood Actor Rajendra Prasad facing big issue after he trolls MGR

மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து தற்போது சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற டாப்பிக்கை பேசி தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மாட்டிக் கொண்டுள்ளார்.

விருது விழாவில் நடந்த சம்பவம்: ஹைதராபாத்தில் நடைபெற்ற கலாப்ரபூர்ண காந்தாராவ் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜேந்திர பிரசாத், பழைய காலத் தெலுங்கு நடிகர் காந்தாராவைப் பற்றி பேசினார். அப்போது காந்தாராவ் நடித்த திரைப்படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாகவும், அவரது திறமையை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் காந்தாராவைப் புகழ்ந்து பேசும் போது, "அவரது படங்களை பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் கூட பயந்துபோய்விடுவார்" என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

Tollywood Actor Rajendra Prasad facing big issue after he trolls MGR

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு: எம்.ஜி.ஆர் தமிழர்களால் மிகவும் மதிக்கப்படும் நடிகரும் முன்னாள் முதல்வரும் என்பதால், அவரைப் பற்றி இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு நடிகரைப் பாராட்டுவதற்காக மற்றொரு லெஜண்ட் நடிகரை இழிவாக பேசுவது சரியல்ல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை: இந்த விவகாரம் வைரலானதையடுத்து, குறிப்பாக தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் ராஜேந்திர பிரசாத் பொதுவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். டோலிவுட்டில் என்டிஆர் குறித்து இப்படி பேசிவிட முடியுமா ராஜேந்திர பிரசாத்தால் என ஏகப்பட்ட பேர் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். இதற்கு அவர் என்ன பதில் அளிப்பார் என்பது தற்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X