»   »  நந்தி விருது பெற்ற ‘அம்மன்’ பட நடிகர் கள்ளு சிதம்பரம் மரணம்

நந்தி விருது பெற்ற ‘அம்மன்’ பட நடிகர் கள்ளு சிதம்பரம் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: பிரபல தெலுங்குப் பட நகைச்சுவை நடிகர் கள்ளு சிதம்பரம், உடல்நலக் குறைபாடு காரணமாக விசாகப்பட்டினத்தில் காலமானார். இவர் தமிழில் அம்மன் படத்தில் நடித்தவர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கள்ளு சிதம்பரம் (67). 1989ம் ஆண்டு கள்ளு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்திற்காக ஆந்திர அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Tollywood comedian Kallu Chidambaram dead

சுமார் 300க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் அம்மன் படத்தில் நடித்திருந்தார்.

சிதம்பரத்திற்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சிதம்பரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். சிதம்பரத்தின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Actor and Tollywood comedian Kolluri Chidambara Rao, popularly known as “Kallu” Chidambaram, died at a private hospital here on Monday. He had been suffering from a respiratory ailment.
Please Wait while comments are loading...