நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை விடாது துரத்தும் போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்காக நேரில் ஆஜரானார்

ஹைதராபாத்: பாலிவுட், சாண்டில்வுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் போதைப் பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் போதைப் பொருள் விவகாரத்தில் விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் முன்பு இன்று நேரில் ஆஜர் ஆகி உள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலத்திற்குள் ரகுல் ப்ரீத் சிங் நுழையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

நாடு முழுவதும் போதைப் பொருள் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மும்பை, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்திலும் போதைப் பொருள் வழக்கு சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக பல முக்கிய பிரபலங்கள் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சிக்கலில் ரகுல் ப்ரீத் சிங்

சிக்கலில் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் பிசி ஹீரோயினாக வலம் வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ராணா டகுபதி முதல்

ராணா டகுபதி முதல்

டோலிவுட் போதைப் பொருள் விவகாரத்தில் 12 பெரும் புள்ளிகளின் பெயர்கள் சிக்கி உள்ளன. பாகுபலி நடிகர் ராணா டகுபதி, ரவிதேஜா, புரி ஜெகநாத், நவ்தீப், நடிகை சார்மி, ரகுல் ப்ரீத் சிங் என எல்லாமே பெரிய தலைகள் தான். போதைப் பொருள் விவகாரத்தில் இதுவரை 20 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்மியிடம் 8 மணி நேர விசாரணை

சார்மியிடம் 8 மணி நேர விசாரணை

நடிகர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சார்மியும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். வியாழக் கிழமையான நேற்று நடிகை சார்மியிடம் சுமார் 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2015 முதல் 2017 வரை அவர் ஈட்டிய சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் புரி ஜெகநாத்

இயக்குநர் புரி ஜெகநாத்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லைகர் படத்தை இயக்கி வரும் பிரபல டோலிவுட் இயக்குநர் புரி ஜெகநாத்திடம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி, ரவிதேஜா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

ரகுல் நேரில் ஆஜர்

ரகுல் நேரில் ஆஜர்

இந்நிலையில், இந்த போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்காக ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று காலை ஆஜர் ஆகி உள்ளார். மாஸ்க் அணிந்து கேஷுவலான உடையில் வந்த அவரை பலரும் சூழ்ந்து கொள்ள போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்தியன் 2, அயலான்

இந்தியன் 2, அயலான்

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும், சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீசையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தியில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் டாக்டர் ஜி படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X