அண்ணா நாங்க இருக்கோம்.. அம்மாவின் இழப்பால் வாடும் மகேஷ் பாபு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவி உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.

டோலிவுட்டின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி தான் இந்த இந்திரா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவின் அம்மா உயிரிழந்த செய்தியை அறிந்த தென்னிந்திய ரசிகர்கள் அண்ணா நாங்க இருக்கோம் என #MaheshBabu ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

மகேஷ் பாபு அம்மா காலமானார்

மகேஷ் பாபு அம்மா காலமானார்

கந்தசாமி படத்தில் சியான் விக்ரமின் மூத்த அதிகாரியாக நடித்திருப்பார் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா. அவரது மனைவியும் டோலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான மகேஷ் பாபுவின் அம்மாவுமான இந்திரா தேவி இன்று காலை 4 மணியளவில் உடல்நலக் கோளாறு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகேஷ் பாபு ரசிகர்கள்

மகேஷ் பாபு ரசிகர்கள்

#MaheshBabu எனும் ஹாஷ்டேக்கை இந்தியளவில் மகேஷ்பாபு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மகேஷ் பாபு அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் கவலைப்படாதீங்க அண்ணா என்றும் ட்வீட் போட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி

பிரபலங்கள் நேரில் அஞ்சலி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அம்மா உயிரிழந்த செய்தி அறிந்து துடித்தெழுந்த டோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்திரா தேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று வருகின்றனர். மேலும், பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 12 மணி வரை இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாஸ் ரசிகர்கள்

பிரபாஸ் ரசிகர்கள்

சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா உயிரிழந்ததை அறிந்ததும் ஓடோடி சென்று மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் ஆறுதல் கூறியிருந்தனர். இந்நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் பலரும் அந்த போட்டோக்களை ஷேர் செய்து மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மற்ற டோலிவுட் நடிகர்களின் ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சகோதரர் காலமானார்

சகோதரர் காலமானார்

இந்த ஆண்டு துவக்கத்தில் மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆவதற்குள் மகேஷ் பாபுவின் அம்மாவும் உயிரிழந்தது மகேஷ் பாபுவையும் அவரது குடும்பத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. அம்மாவை பிரிந்து துயரில் வாடி வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X