கல்கி படத்தில் இத்தனை பிரபலங்கள் கேமியோவா?.. இவங்களை எல்லாம் புரமோஷனுக்கு யூஸ் பண்ணியிருக்கலாமே
சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கல்கி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கல்கி படத்தில் ஏற்கனவே இந்தியளவில் பிரபலங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மேலும், சில முன்னணி நடிகர்கள் கேமியோ ரோலில் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரே தெறிக்கின்றன. ஸ்பாய்லர்ஸ் பண்ணிட வேண்டாம் என நாக் அஸ்வின் கேட்டுக் கொண்டாலும் காலையில் இருந்து சோஷியல் மீடியாவில் அந்த நடிகர்களின் ரசிகர்கள் கல்கி படத்தில் இவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவர் அந்த கேமியோவில் வருகிறார் என அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

சில முன்னணி நடிகைகளும், இயக்குநர்களும் கூட படத்தில் நடித்திருப்பதாக கூறுகின்றனர். கல்கி படத்திற்கான ட்விட்டர் விமர்சனங்களும் கலவையான முறையிலேயே வந்து குவிந்து வருகின்றன.
பிரபாஸுக்கு அடுத்த பிளாக்பஸ்டர்?: கல்கி திரைப்படத்தின் முதல் பாகமாகவே இந்த படம் உருவாகி இருக்கிறது. முதல் பாதியில் பிரபாஸ் வெறும் சில காட்சிகள் மட்டுமே வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனத்தில் தெரிவித்து வருகின்றனர். 2ம் பாதியில் இருந்து படம் சூடு பிடிக்க ஆரம்பித்து ராக்கெட் வேகத்தில் செல்வதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. படத்தின் கிளைமேக்ஸில் மிகப்பெரிய குருக்ஷேத்ர போர் காட்சியையும் காட்டுவதாகவும் ஸ்பாய்லர்ஸ் வெளியாகி உள்ளன.
துல்கர் சல்மான் முதல் மிருணாள் தாகூர் வரை: நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் புஜ்ஜி எனும் ஏஐ வாய்ஸுக்கு குரல் கொடுத்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் இந்த படத்திலும் இடம் பெறுவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ராஜமெளலி, ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. நல்ல வேளையாக அவர்கள் நடித்த காட்சிகளை லீக் செய்யவில்லை. அதுவரை சந்தோஷம் தான்.
பார்ட் 2 தான் படமே?: கல்கி படத்தின் முதல் பாகத்தின் முதல் பாதி முழுக்கவே அந்த கதையை செட் செய்யவே இயக்குநர் நாக் அஸ்வின் எடுத்திருக்கிறார் என்றும் கல்கி படத்தின் 2ம் பார்ட் வந்தால் தான் மொத்த கதையும் தெரிய வரும் எனக் கூறுகின்றனர். பிரம்மாண்ட விஷுவல்ஸ் ட்ரீட் ரசிகர்களுக்கு தியேட்டரில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் இதை ரசிகர்கள் மிஸ் செய்து விட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications