'ஜில்லா' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் போட்டா போட்டி
ஹைதராபாத்: ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் போட்டி போடுகிறார்களாம்.
விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ஜில்லா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்.பி. சவுத்ரி மகிழ்ச்சியாக உள்ளார்.
படத்தின் வெற்றியை பார்த்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஜில்லாவின் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கிறது.

முன்னணி ஹீரோக்கள்
ஜில்லா ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் போட்டி போடுகிறார்களாம்.

சிரு, ராம் சரண்
ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், விஜய் கதாபாத்திரத்தில் அவரது மகன் ராம்சரண் தேஜாவும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது வெறும் வதந்தியாம்.

ஜூனியர் என்.டி.ஆர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஏற்கனவே தெலுங்கு படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் ஜில்லா ரீமேக்கை தயாரிப்பதால் அதில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
ஜில்லா ரீமேக்கில் நடிக்க முன்னணி தெலுங்கு ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நடிகரை தேர்வு செய்ய இன்னும் ஒரு மாதமாகுமாம். மேலும் மோகன்லால் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற ஒரு நடிகரையும் தேடுகிறார்களாம்.

ஹீரோயின்
நடிகர்கள் சரி நாயகியாக தெலுங்கிலும் காஜல் அகர்வாலையே ஒப்பந்தம் செய்வார்களா?. காஜலுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











