இது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை?
Recommended Video

ஹைதராபாத்: 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகர்கள் யாரும் விரும்பவில்லையாம்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 96-ஐ தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் தில் ராஜு பெரிய நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்.
96 ரீமேக்கில் நானி நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது.

சமந்தா
தில் ராஜு நானி, சமந்தா ஆகியோரை வைத்து 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பினாராம். இருவரையும் அழைத்து படத்தை போட்டுக் காண்பித்தாராம். படத்தை பார்த்த நானி ஃபீல் ஆகி கண்ணீர் விட்டாராம். மேலும் இந்த படத்தில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று அவர் ராஜுவுக்கு வாக்குறுதியும் அளித்தாராம்.

ஹீரோ
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறேன் என்று கூறிய நானி பின்னர் முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ஷர்வானந்த் முதல் பல ஹீரோக்களிடம் தில் ராஜு கேட்டும் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன காரணம்?
ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் தயங்குவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒன்று விஜய் சேதுபதி அளவுக்கு நடிக்க முடியுமா என்று நினைக்கலாம் இல்லை என்றால் ரீமேக்கில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் இல்லை என்றால் ஒரிஜினல் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து கலாய்ப்பார்களோ என்று நினைக்கலாம்.

சமந்தா
96 படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்த சமந்தாவே அதை ரீமேக் செய்யக் கூடாது என்று தெரிவித்தார். முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். ஆனால் பிரேமம் போன்று அந்த படம் இல்லை என்ற விமர்சனம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தான் தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளாரே. பேசாமல் அவரையும், த்ரிஷாவையும் வைத்தே ரீமேக் செய்யலாமே.


Click it and Unblock the Notifications