மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறந்த நாள்..விஐபிக்கள் வாழ்த்து !

சென்னை : பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்திய அளவில் மிகப் பிரபலமான மூத்த நடிகராகவும், ஹையஸ்ட் பெய்டு ஆக்டராகவும் இருந்து வருகிறார்.

Recommended Video

பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது.. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி உருக்கம்!

1980 மற்றும் 90களில் கொடிகட்டிப் பறந்து முன்னணி நடிகராக இன்று வரை வலம் வரும் சிரஞ்சீவி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.

அசர வைக்கும் ஆக்சன் காட்சிகள், துள்ளலான நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய சிரஞ்சீவி இந்தியாவிலிருந்து ஆஸ்கர் வரை அழைக்கப்பட்ட வெகு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆவார். இவ்வாறு பல்வேறு சாதனைகளுக்கும், பெரும் புகழுக்கும் சொந்தக்காரரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைக் கூறி மிரளவைத்து வருகின்றனர்.

பத்ம பூஷன்

பத்ம பூஷன்

தெலுங்கு திரைப்படத் துறையில் இன்றளவும் அதிகம் ரசிகர்களைக் கொண்ட சிறந்த நடிகராகவும், அதிக சம்பளம் பெறும் நடிகராகவும், ஆல் டைம் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் இருந்து வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் சிறந்த நடிகருக்காக இன்றுவரை பல்வேறு விருதுகளை பெற்று டோலிவுட் சினிமாவின் நிகரற்ற ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார்.

தனது இயற்பெயரை

தனது இயற்பெயரை

"கோனிடேலே சிவா சங்கர வீர பிரசாத்" என்ற தனது இயற்பெயரை சினிமாவிற்காக சிரஞ்சீவி என மாற்றிக் கொண்ட தென்னிந்தியாவின் மூத்த நடிகராகவும் முதன்மை நடிகராகவும் இருந்து வரும் இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

நடிப்பு வாழ்க்கையை தொடங்கி

நடிப்பு வாழ்க்கையை தொடங்கி

தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் சிரஞ்சீவி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். "புனதிரல்லு" என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சிரஞ்சீவி இன்று வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையில் நனைய வைத்து வருகிறார்.

பிக்கர் தன் பச்சன்

பிக்கர் தன் பச்சன்

இயக்குனர் கே ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான "கரன மோகுடு" என்ற திரைப்படம் தெலுங்கு சினிமாவிலேயே முதல் முறையாக டிக்கெட் கவுண்டரில் 10கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் உருவான சிரஞ்சீவியை இந்தியாவின் பிரபல நாளிதழ் ஒன்று "பிக்கர் தன் பச்சன்"என்று அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து கூறியிருந்தது அப்பொழுது மிகப் பிரபலமாக பேசப்பட்டது.

தன்னிகரற்ற மெகா ஸ்டார்

தன்னிகரற்ற மெகா ஸ்டார்

1992லேயே சுமார் 1.25 கோடி ரூபாய் வரை ஒரு திரைப்படத்திற்கான சம்பளமாக பெற்ற சிரஞ்சீவி இன்று வரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் தன்னிகரற்ற மெகா ஸ்டாராக விளங்கி வருகிறார்.

கே.பாலச்சந்தர் புகழாரம்

கே.பாலச்சந்தர் புகழாரம்

நடிகராக பலரையும் மிரள வைத்து வரும் சிரஞ்சீவி 1988 ஆம் ஆண்டு இணை தயாரிப்பில் தயாரித்த "ருத்ரவீணா" திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று வந்தது. இந்நிலையில் இயக்குனர் கே. பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை கமல் ஹாசன் மற்றும் ரஜினி என இருவரும் சேர்ந்த கலவையாக நான் பார்க்கிறேன், ஆக்சன் காட்சிகளில் பிரமாதப் படுத்துவதிலும், நடிப்பு காட்சிகளில் அனைவரையும் வியக்க வைப்பதிலும் சிரஞ்சீவி மிகச் சிறந்தவர் இவ்வாறு கே.பாலச்சந்தர் புகழாரம் சூட்டியிருந்தார்.

ராகவா லாரன்ஸ் வாழ்த்து

ராகவா லாரன்ஸ் வாழ்த்து

மேலும் சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் சிறந்த நடன இயக்குனர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் சிரஞ்சீவியின் மீது தான் கொண்டுள்ள அதீத மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியவாறு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சிரஞ்சீவிக்கு தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

பல்வேறு சாதனைகளுக்கும், புகழுக்கும் சொந்தக்காரரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று அது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களைக் கூறி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு படுஜோராக கொண்டாடி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X