டாப் ஸ்டாரா இருக்கிற அவர்ட்ட இதை எதிர்பார்க்கலை... நடிகர் விஜய் சேதுபதியை அப்படி புகழும் டோலிவுட்
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் சிம்பிளிசிட்டியை தெலுங்கு திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிசி நடிகர், விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், ஹீரோ என்றில்லாமல், சிறந்த கதை என்றால் எந்த கேரக்டரிலும் நடிப்பார்.

தெலுங்கு சினிமாவில்
இப்போது இந்தியில் ஆமிர்கானின் லால்சிங் சத்தா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் கேரக்டருக்கு அங்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு அதிக அழைப்பு வருகிறது. இப்போது 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

தேவிஶ்ரீ பிரசாத் இசை
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. மரணமாஸ் தலைவா, வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படத்தை புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோ. கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

சிம்பிளிசிட்டி
இந்நிலையில் விஜய் சேதுபதியின் சிம்பிளிசிட்டியை தெலுங்கு திரையுலகினர் பாராட்டி வருகின்றனர. வழக்கமாக பெரிய கேரவன், சில அசிஸ்டென்ட்கள், சொகுசான கவனிப்புகள், ஸ்டார் ஹோட்டல் உணவு என்றுதான் தெலுங்கு நடிகர்கள் இருப்பார்கள். ஆனால், விஜய் சேதுபதி தமிழில் பெரிய நடிகராக இருந்தாலும், மிகவும் எளிமையாக நடந்துகொள்கிறார்.

புரொடக்ஷன் டீ
ஷாட் முடிந்ததும் அங்குள்ள உதவியாளர்களுடன் சுவரில் கூட உட்கார்ந்துகொள்கிறார். உதவி இயக்குனர்களிடம் சஜகமாக, தெலுங்கில் பேசுகிறார். புரொடக்ஷனில் கொடுக்கும் டீயை, சாதாரண கப்பிலேயே குடிக்கிறார் என்று உப்பெனா டீம் புகழ்கிறது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் அவரது சிம்பிளிசிட்டியை பேசி வருகின்றனர். உப்பெனாவை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











