சினிமா தான் எங்கள் வாழ்க்கை.. சதி செய்கிறார்கள்..பிரபல நடிகர் உருக்கம்!
சென்னை : சினிமா தான் எங்கள் வாழ்க்கை, சதி செய்து என் படத்தை நிறுத்திவிட்டார்கள் என்று பிரபல நடிகர் உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகர் ராஜசேகர் தமிழில் இதுதாண்டா போலீஸ், புதுமைப்பெண், ஆம்பள, மீசைக்காரன், தலைவா, அண்ணா உள்பட பல படங்களில் நடித்தவர் ராஜசேகர். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.
தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள டாக்டர் ராஜசேகர், ஆக்ஷன் த்ரில்லர் படமான 'சேகர்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் என்ட்ரியாகி உள்ளார். இந்தப் படம் 19ந் தேதி திரையரங்கில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. ஆனால் திடீரென்று கணு பரந்தாம ரெட்டி என்ற பைனான்சியர், ராஜசேகரின் மனைவி ஜீவிதா படத்திற்காக கடன் வாங்கி இருந்தார். ஆனால், இன்னும் கடனை அடைக்கவில்லை என்று ஜீவிதா மீது வழக்கு தொடர்த்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'சேகர்' படத்தை வெளியிட தடை விதித்துள்ளது இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜேசேகரை காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படம் செய்யப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இதையடுத்து, நடிகர் ராஜசேகர், உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இதில், என் குடும்பத்திற்கு 'சேகர்' படம்தான் மிகவும் முக்கியமான படமாகும். இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். 19ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், என்மீது உள்ள வெறுப்பின் காரணமாக, சிலர் சதி செய்து படத்தை திரையிடவிடாமல் தடுத்துள்ளனர்.
சினிமாதான் எங்கள் வாழ்க்கை. இந்தப் படம் எங்களின் நம்பிக்கை. இந்தப் படம் ரசிகர்களின் பார்வைக்கு மீண்டும் வரும் என்று தகுதியான பாராட்டைப் பெறும் என்றும் நம்புகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ராஜசேகரின் மனைவி ஷிவானி ராஜசேகரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











