25 வயசு சின்னப்பொண்ணு.. டேட்டிங்கில் மிரட்டிவிடும் டாம் க்ரூஸ்.. இப்படி மாட்டிக்கிட்டாரேப்பா!

சென்னை: ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான டாம் க்ரூஸ். இவரது காதலிகளை மட்டும் பட்டியலிட்டால் நம்ம ஊரு பசங்க சொல்ற மாதிரி, அடிஷ்னல் சீட் கிடைக்குமா சார் எனக் கேட்கும் அளவுக்கு நீளும். கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் இந்த விஷயத்தில் இவரை ஹாலிவுட்டின் எம்.ஆர். ராதா என்று கூட கிண்டலுக்கு சொல்லுவார்கள். காரணம் தலைவன் டான் க்ரூஸின் சேட்டைகள் அப்படி. 63 வயதான டாம் க்ரூஸ் இப்போது தன்னை விட 25 வயது குறைவான ஆனா டி ஆர்மஸ் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் உள்ளார். இது தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டாம் க்ரூஸ் ஏற்கனவே மூன்று முறை திருமணமானவர், 10க்கும் மேற்பட்ட முறையில் காதலில் விழுந்தவர். அந்த வகையில் அவரது திருமண வாழ்க்கைகள் குறித்து எடுத்துக் கொண்டால், திருமண வாழ்க்கை முடிவுக்கு வர அவர் பின்பற்றும் செயிண்டாலஜி மதம் தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது இவர் தனது முதல் மனைவியான மிமி ரோஜர்ஸிடம் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மதத்தை, மனைவியைப் பிரிந்த பின்னரும் பின்பற்றி வருகிறார். 1985ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சந்தித்து இருந்தாலும் அப்போது, மிமி வேறு ஒருவருடன் காதலில் இருந்துள்ளார். அந்த காதலின் பிரிவுக்குப் பின்னரே, 1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இவர்களின் திருமண பந்தம் நீடித்தது. அதன் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். இவர்களின் பிரிவின் போது டாம் சொன்னது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, " "எங்கள் திருமண பந்தத்தில் நல்ல அம்சங்கள் இருந்தாலும், சில தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தன," என்று தெரிவித்தார்.

Tom Cruise amp amp Ana de Armas appear to confirm romance after being spotted holding hands

இரண்டாவது திருமணம்: நிக்கோல் கிட்மேன் அவரது திருமண பந்தத்தில் 11 ஆண்டுகள் நீடித்த திருமண உறவு இதுதான். 1990-ல் 'டேஸ் ஆஃப் தண்டர்' படப்பிடிப்பில் நிக்கோல் கிட்மேனை சந்தித்த க்ரூஸ், விரைவாக காதலில் விழுந்து, அதே ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கொலராடோவில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தின் போது இருவரும் இசபெல்லா மற்றும் கானர் என்ற இரு குழந்தைகளை தத்தெடுத்தனர். 'ஃபார் அண்ட் அவே' மற்றும் 'ஐஸ் வைட் ஷட்' உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இருப்பினும், 2001-ல் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்தப் பிரிவுக்கு சயின்டாலஜி மதத்தை டாம் க்ரூஸ் மிகவும் தீவிரமாக பின் பற்றுவதுதான் காரணம் எனவும் சிலர் கூறினார்கள்.

மூன்றாவது திருமணம்: கேட்டி ஹோம்ஸ் (2005-2012)2005-ல் க்ரூஸ், நடிகை கேட்டி ஹோம்ஸை சந்தித்தார். அதன் பின்னர் காதல் என கொஞ்ச காலம் டேட்டிஙில் இருந்தார்கள். இருவருக்கும், 2006 ஏப்ரலில் சூரி நோயல் என்ற மகள் பிறந்தார். மகள் பிறந்த பின்னரே இருவரும் அதே ஆண்டு நவம்பரில், இத்தாலியில் ஒரு செயிண்டாலஜி விழாவில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2012-ல் ஹோம்ஸ் விவாகரத்து கோரினார், மேலும் சூரி நோயலை, தானே கவனித்துக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஹோம்ஸ். அதன் பின்னர் டாம் க்ரூஸ் திருமணமே செய்து கொள்ளவில்லை. மூன்றாவது விவாகரத்துக்குப் பின்னரும் அவர் பல காதல்களை எதிர் கொண்டார். ஆனால் எதுவும் திருமணத்தை நோக்கி நகரவில்லை. இந்நிலையில் இவர் தன்னை விட 25 வயது குறைவான, 37 வயதான நடிகை ஆனா டி ஆர்மஸ் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் உள்ளார். இது தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X