நன்றி சொல்வதற்காக ஹெலிகாப்டரில் இருந்து குதித்த டாம் குரூஸ்... அதிர்ச்சியில் ஹாலிவுட் ரசிகர்கள்!

கேப் டவுன்: ஹாலிவுட்டில் டாம் குரூஸ் நடித்த டாப் கன்: மேவ்ரிக் திரைப்படம் கடந்த மே மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
டாம் குரூஸின் ஆக்சன் ட்ரீட்டாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், டாப் கன்: மேவ்ரிக் பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக டாம் குரூஸ் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 டாப் கன்: மேவ்ரிக் பாக்ஸ் ஆபிஸ்

டாப் கன்: மேவ்ரிக் பாக்ஸ் ஆபிஸ்

டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ் நடித்த டாப் கன் திரைப்படம் 1986ம் ஆண்டில் ரிலீஸானது. அதன் தொடர்ச்சியாக 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 'டாப் கன்: மேவ்ரிக்' என்ற திரைப்படம் இந்தாண்டு மே மாதம் வெளியானது. இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்க டாம் குரூஸ் ஹீரோவாக நடித்திருந்தார். டாம் குரூஸுடன் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், 170 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் 7500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.

 அமேசான் ஓடிடியில் ரிலீஸ்

அமேசான் ஓடிடியில் ரிலீஸ்

திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது டாப் கன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 26ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது டாப் கன்: மேவ்ரிக். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால், ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், இப்போது ஓடிடியில் பார்க்க ரெடியாகிவிட்டனர்.

 நன்றி சொன்ன டாம் குரூஸ்

நன்றி சொன்ன டாம் குரூஸ்

இந்நிலையில், டாப் கன் மேவ்ரிக் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாம் குரூஸ். அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அவர் நன்றி கூறியுள்ளது, ரசிகர்களுக்கு திரில்லராக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது யூடியூப்பிலும் வெளியாகியுள்ளது. அதில், ஹெலிகாப்டரின் ஓரத்தில் பாராசூட் கையுறைகளை அணிந்தபடி அமர்ந்திருக்கும் டாம் குரூஸ், "அனைவருக்கும் வணக்கம், நாங்க தென்னாப்பிரிக்காவைக் கடந்துவிட்டோம். மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் படங்களின் இரண்டு பாகங்களை ஷூட் செய்ய காத்திருக்கிறோம். டாப் கன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை, டாப் கன்: மேவரிக் படத்தை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.

 அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக ஹெலிகாப்டரில் இருந்து டாம் குரூஸ் குதித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டாம் குரூஸ் குதிக்கும் போது, 'டெட் ரெக்கனிங்' படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரியை குரூஸ் அறிமுகப்படுத்தினார். டாப் கன் மேவ்ரிக் திரைப்படம் கோல்டன் குளோப் விருது போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான டாம் க்ரூஸ், ஒரு அதிரடி தாக்குதல் திட்டத்திற்காக இளம் போர் விமானிகள் குழுவுக்கு பயிற்சி அளிக்கிறார். அங்கு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த கூஸ்-இன் மகன் பிராட்லி பிராட்ஷாவை சந்திக்கிறார். நண்பனை போல் பிராட்லிக்கும் எதுவும் ஆக கூடாது என்பதற்காக தாக்குதல் திட்டத்திற்கு அவரை சேர்க்க டாம் க்ரூஸ் தடுமாறுகிறார். இந்த சூழ்நிலையில் டாம் க்ரூஸ் எதிரிகளுடான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினாரா? இல்லையா? என்பதே டாப் கன் மேவ்ரிக் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X