ரியல் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ்.. உயிரை மீண்டும் பணயம் வைத்து மிரட்டல் சாகசம்.. வைரலாகும் வீடியோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது அடுத்த படத்திற்காக நார்வே நாட்டில் உயிரை பணயம் வைத்து செய்த சாகச வீடியோ பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது.

மீண்டும் தான் ஒரு ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை இந்த பைக் ஸ்டன்ட் மூலம் நிரூபித்துள்ளார் டாம் க்ரூஸ். மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்காக இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

விமானத்தில் தொங்கிய படியும், ஹெலிகாப்டர் சாகசம், பெரிய ஜம்ப் செய்து முட்டியை உடைத்துக் கொண்டது என பல முறை உயிரை பணயம் வைத்து இவர் ஏகப்பட்ட சாகசங்களை தனது படங்களுக்காக டூப் போடாமல் செய்து வருகிறார்.

பெரிய திரையில்

பெரிய திரையில்

சமீபத்தில் லண்டனில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது, அங்கே சென்ற நடிகர் டாம் க்ரூஸ், கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து மாஸ்க் அணிந்தபடி பார்த்தார். பெரிய படங்களை, பெரிய திரையில் தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் போட்ட அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விமானத்தில் தொங்கியபடி

விமானத்தில் தொங்கியபடி

2015ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன் படத்தின் ஒரு காட்சிக்காக, ரியல் விமானத்தில் தொங்கியபடி இவர் செய்த சாகசம் ஒட்டுமொத்த திரையுலகையே வாயை பிளக்க வைத்தது. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையாக 1996ம் ஆண்டு முதல் மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களில் நடித்து மிரட்டி வருகிறார் டாம் க்ரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் பலத்த காயம்

காலில் பலத்த காயம்

கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் படத்திற்காக ஹெலிகாப்டர் ஸ்டன்ட்களை டூப் போடாமல் செய்து அசத்தி இருந்தார் டாம் க்ரூஸ். அதிலும் ஒரு காட்சியில் மிகப்பெரிய இடத்தில் இருந்து மற்றொரு பில்டிங்கிற்கு எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் இவர் தாவி ஸ்டன்ட் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டாம் க்ரூஸின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரியல் சூப்பர்ஸ்டார்

ரியல் சூப்பர்ஸ்டார்

இந்நிலையில், தற்போது நார்வே நாட்டில் இவர் செய்த மிகப்பெரிய பைக் ஸ்டன்ட் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த அளவுக்கு, மிகப்பெரிய இரும்பு டிராக்கில் இருந்து பாதாள பள்ளத்தை நோக்கி பறந்த படி பைக்கை விட்டு எகிறி, பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் ஒட்டுமொத்த சாகசத்தையும் உயிரை பணயம் வைத்து செய்து காட்டி தான் ஒரு ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

நிலவில் படப்பிடிப்பு

நிலவில் படப்பிடிப்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிலவிலேயே தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தவும் டாக் க்ரூஸ் திட்டமிட்டு இருப்பது சினிமா உலகையே வியக்க வைத்தது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து விரைவில் அந்த சாதனையையும் நடிகர் டாம் க்ரூஸ் செய்யப் போவதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் நிச்சயம் கண்டு ரசிப்பார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X