twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டில் அனல் பறக்கும் அந்த விவகாரம்.. கோல்டன் குளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனக்கு கொடுக்கப்பட்ட 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    கோல்டன் குளோப் விருது விழாவை நடத்தி வரும் HFPA எனப்படும் ஹாலிவுட் ஃபாரீன் பிரஸ் அசோஷியனின் சமீபத்திய நடவடிக்கையை ஏகப்பட்ட பிரபலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

    கர்நாடகத்தை சூறையாடும் கொரோனா.. கன்னட பிக் பாஸ் பாதியிலேயே நிறுத்தம்! </a><a href=" title="கர்நாடகத்தை சூறையாடும் கொரோனா.. கன்னட பிக் பாஸ் பாதியிலேயே நிறுத்தம்! " />கர்நாடகத்தை சூறையாடும் கொரோனா.. கன்னட பிக் பாஸ் பாதியிலேயே நிறுத்தம்!

    நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தாங்கள் இனி HFPA உடன் எந்த தொடர்பிலும் இருக்க மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    கோல்டன் குளோப் விருதுகளை HFPA எனப்படும் ஹாலிவுட் ஃபாரீன் பிரஸ் அசோஷியன் தான் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இனவெறியை தூண்டும் விதமாக HFPA செயல்படுகிறது என்றும் அந்த அமைப்பில் இருக்கும் அனைவருமே வெள்ளை நிற பத்திரிகையாளர்கள் மட்டுமே என்றும் சர்ச்சை கிளம்பியது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    அடுத்த ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவை என்பிசி தொலைக்காட்சி ஒளிபரப்பாது என அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை கோல்டன் குளோப் விருது விழாவுக்கு அனுப்பாது என கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    13 பேர்

    13 பேர்

    தற்போது 87 உறுப்பினர்களுடன் இருக்கும் அந்த அமைப்பு அடுத்த ஆண்டு 100 அமைப்பினர்களை கொண்டதாக மாற்றப்படும் என்றும், அதில் 13 பேர் கருப்பினத்தவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஏன் கருப்பினத்தவர்களை புறக்கணித்தீர்கள் என்கிற கேள்வியை எழுப்பி பலரும் அந்த அமைப்பை விளாசி வருகின்றனர்.

    உங்க விருதே வேண்டாம்

    உங்க விருதே வேண்டாம்

    இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் அந்த அமைப்புக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக 3 முறை அவர் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்து கெத்துக் காட்டியுள்ளார். டாம் க்ரூஸின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மற்ற பிரபலங்களும் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

    3 கோல்டன் குளோப்

    3 கோல்டன் குளோப்

    1990ம் ஆண்டு Born on the Fourth of July படத்திற்கும் 1997ம் ஆண்டு Jerry Maguire படத்துக்கும், 2000ம் ஆண்டு வெளியான மக்னோலியா படத்தில் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதுகளையும் நடிகர் டாம் க்ரூஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த மூன்று விருதுகளையும் திருப்பி அளித்துள்ளார்.

    English summary
    Popular Hollywodd actor Tom Cruise returns his three Golden Globes over ongoing HFPA controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X