twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாஸிபிள்’ 7 ஆம் பாகம் ட்ரெய்லர் வெளியானது...இதற்கு முன் வந்த படங்கள் அலசல்

    |

    சென்னை: டாம் குரூஸ் ஹாலிவுட் உலகின் புகழ்பெற்ற நடிகர், ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து புகழ்பெற்றவர்.

    விமானம், கார், பைக் என அவரது சாகசக்காட்சிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்துவிடும். பில்டிங் விட்டு பில்டிங் தாவுவது, ஸ்டண்ட் காட்சிகளுக்கும் பெயர் பெற்றவர் டாம் குரூஸ்.

    அவரது டாப் கன், மிஷன் இம்பாஸிபிள் இரண்டு படங்களும் புகழ்பெற்றவை. இதில் மிஷன் இம்பாசிபிள் 6 பாகங்கள் வெளிவந்துள்ளன.

    மாறும் மக்கள் ரசனை...புது படங்கள் அவ்வளவு மோசமாவா இருக்கு...கோலிவுட்டை அதிர வைத்த ஓடிடி மாறும் மக்கள் ரசனை...புது படங்கள் அவ்வளவு மோசமாவா இருக்கு...கோலிவுட்டை அதிர வைத்த ஓடிடி

    ஈதன் ஹண்ட் கேரக்டர்

    ஈதன் ஹண்ட் கேரக்டர்

    ஈதன் ஹண்ட் இந்த கேரக்டரை ஹாலிவுட் தாண்டி உலக ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் டாம் குரூஸின் கேரக்டர்தான் ஈதன் ஹண்ட். சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது.

    மிஷன் இம்பாசிபிள் சீரிஸ்

    மிஷன் இம்பாசிபிள் சீரிஸ்

    முதல்பாகம் பெரிய அளவில் பெற்றதை அடுத்து மிஷன் இம்பாசிபிள் 2 வது பாகம் 2000 ஆம் ஆண்டு இதே நாளில் (மே.24) வெளியானது. சீக்ரெட் ஏஜண்டான ஈதன் ஹண்ட் தொற்று நோயைப்பரப்பும் வகையில் விற்கப்படும் வைரஸை தடுத்து உலகை காப்பதாக இருக்கும். இப்படத்தில் இவருடன் ஒரு குழு செயல்படும்.

    டாம் குரூஸ் குழு

    டாம் குரூஸ் குழு

    2006 ஆம் ஆண்டு வெளியான முன்றாம் பாகத்தில் டாம் குரூஸுக்கு உதவும் கண்டுபிடிப்பாளராக பெஞ்ஜிடன் பாத்திரத்தில் சைமன் பெக் இணைந்தார். இவர் அதுமுதல் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிளின் அனைத்து பாகங்களிலும் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதேபோல் மிஷன் இம்பாசிபிள் படத்தின் அனைத்து பாகங்களிலும் டாம் குரூஸுக்கு உதவும் பாத்திரத்தில் லூதர் ஸ்டிக்கெல் பாத்திரத்தில் விங் ரேம்ஸ் நடித்து வருகிறார். இவர் மிஷன் இம்பாசிபிள் 8 வது பாகத்திலும் நடித்துள்ளார்.

    தயாரிப்பாளரும் டாம் குருஸே

    தயாரிப்பாளரும் டாம் குருஸே

    முதல் மூன்று பாகங்களை மற்றொரு தயாரிப்பாளருடன் சேர்ந்து டாம் க்ரூஸ் தயாரித்தார் அதன் பின்னர் வந்த 3 பாகங்கள் வர உள்ள 2 பாகங்களை அவர் மட்டும் அல்லாமல் மேலும் சில தயாரிப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு தயாரிக்கிறார்.

    தொடர்ந்து வந்த 6 பாகங்கள்-

    தொடர்ந்து வந்த 6 பாகங்கள்-

    தொடர்ந்து 2011, 2015, 2018 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தன. ஒரு பாகத்தை விஞ்சும் அளவில் இன்னொரு பாகம் இருக்கும். ஸ்டண்ட் காட்சிகளும் அவ்வாறே இருக்கும். முக்கியமாக ஹெல்மட் இல்லாமல் மோட்டார் பைக்கை டாம் க்ரூஸ் வேகமாக ஓட்டும் காட்சியும், வேகமாக ஓடி பில்டிங்கில் இருந்து பிடிங் தாவும் காட்சிகளும் கட்டாயம் இருக்கும், இது தவிர அறிவியல் துணையுடன் புதிய கருவிகளை கொண்டு முகத்தை மாற்றும் செலுலாய்டு 3 டி டெக்னாலஜியும் ஒரு படத்தில் இருக்கும்.

    7,8 வது பாகங்கள்

    7,8 வது பாகங்கள்

    இவ்வாறு பெரும் வரவேற்பைப் பெற்ற மிஷன் இம்பாசிபிள் படத்தின் அடுத்த 2 பாகங்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வர உள்ளது. 7 ஆம் பாகமான MISSION IMPOSSIBLE 7 DEAD RECKONING 2021 ஆம் ஆண்டே வரவேண்டியது. கொரோனா பேரிடர் காரணமாக தள்ளிப்போனது. தற்போது 2023 ஆம் ஆண்டு வர உள்ள நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Top Gun Maverick Tamil Review | Yessa ? Bussa ? | Filmibeat Tamil
    ட்ரெய்லரில் என்ன இருக்கு

    ட்ரெய்லரில் என்ன இருக்கு

    ட்ரெய்லரில் ஒரு சாவியை கைப்பற்ற டாம் க்ரூஸ் போராடுவதுபோல் உள்ளது. இப்படத்தில் ரெயிலில் சாகசம் கூடுதலாகவும், வழக்கம்போல் பைக் சாகசம், கார் சேஸிங் காட்சிகளும் உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டாப் கன் மேவ்ரிக் வெளிவர உள்ள நிலையில், அடுத்த ஆண்டு அவர் படங்கள் வழக்கமாக வெளியிடப்படும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகலாம்.

    English summary
    The 7th part of Tom Cruise's famous 'Mission Impossible' series, the DEAD RECKONING trailer with exciting adventures has been released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X