twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்தோஷமான செய்தி.. மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் டாம் ஹேங்க்ஸ்! என்ன ஆனது கொரோனா?

    |

    ஆஸ்திரேலியா: ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வியாழக் கிழமை கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனை, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    தனக்கும், தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியது என்பதை நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்தார்.

    ஹாலிவுட் அதிர்ச்சி

    ஹாலிவுட் அதிர்ச்சி

    கேஸ்ட் அவே, ஃபாரஸ்ட் கம்ப், தி டெர்மினல், டேவின்ஸி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ், இன்ஃபெர்னோ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களில் நடித்த டாம் ஹேங்க்ஸுக்கு கொரோனா வைரஸ் பரவியதை அறிந்த ஹாலிவுட் திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது. அதன் பின்னர், தான் உலகளவில் சினிமா ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டன.

    ஆஸ்கர் நாயகன்

    ஆஸ்கர் நாயகன்

    1994ம் ஆண்டு பிலடெல்ஃபியா படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற்ற டாம் ஹேங்க்ஸ், அடுத்த ஆண்டு ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றார். மேலும், கேஸ்ட் அவே, சேவிங் பிரைவேட் ரியான், பிக் மற்றும் எ பியூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹுட் படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார்.

    வைரஸ் படம்

    வைரஸ் படம்

    டேவின்ஸி கோட், தி ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படங்களை தொடர்ந்து ரான் ஹோவர்ட் இயக்கத்தில் வெளியான அடுத்த சர்ச்சைக்குரிய படமான இன்ஃபெர்னோ படத்திலும் டாம் ஹேங்க்ஸ் நாயகனாக நடித்திருந்தார். உலகம் முழுவதையும் அழிக்கும் மோசமான வைரஸ் குறித்த படத்தில் நடித்த டாம் ஹேங்க்ஸுக்கு நிஜ வாழ்விலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

    விடுவிக்கப்பட்டார்

    விடுவிக்கப்பட்டார்

    கடந்த வியாழக் கிழமை கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், இருவரையும் மருத்துவமனையில் இருந்து விடுவித்துள்ளனர்.

    வீட்டுக்குள் சிறை

    வீட்டுக்குள் சிறை

    மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக குறையும் வரை, வீட்டுக்குள்ளே சிறைபட்டு இருக்க வேண்டும் என டாம் ஹேங்க்ஸுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்று டாம் ஹேங்க்ஸ் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

    English summary
    Tom Hanks and Rita Wilson have been released from a Queensland hospital in Australia and are now in self-quarantine at their home there, a representative for Hanks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X