கேட்பீங்களாய்யா.. அந்த 3 விஷயங்கள் முக்கியம்.. ஹாலிவுட் ஹீரோ டாம் ஹாங்க்ஸின் அசத்தல் அட்வைஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா விஷயத்தில் மக்கள் மூன்று விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். ஸ்லீப்லெஸ் நைட்ஸ், பிலடெல்பியா, பாரஸ்ட் கம்ப், அப்பலோ 13 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
பிலடெல்பியா, பாரஸ்ட் கம்ப் படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதுகளை வென்றவர் இவர்.

கொரோனா தொற்று
டாம் ஹாங்க்ஸ் இப்போது நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி ரீடா வில்சனுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை உறுதி செய்த நடிகர் டாம் ஹாங்க்ஸ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். 'தொடர்ந்து நடக்கும் விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்' என்று கூறியிருந்தார்.

தடுப்பு மருந்து
பின்னர் கொரோனாவில் இருந்து இருவரும் குணமானதை அடுத்து அமெரிக்கா திரும்பினர். இதையடுத்து டாம் ஹாங்க்ஸ், ரீடா இருவரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கான பிளாஸ்மா சிகிச்சைக்காகத் தங்கள் ரத்தத்தைக் கொடுத்தனர். பின்னர் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக மீண்டும் ரத்தம் கொடுக்க முன்வந்தனர்.

முன்னெச்சரிக்கை
இதை சமூக வலைத்தளத்தில் டாம் ஹாங்க்ஸ் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை கூறி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா வைரஸ் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள டாம் ஹாங்ஸ், மாஸ்க் அணிவதைத் தவிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். .

சமூக இடைவெளி
அவர் கூறும்போது, மூன்று விஷயங்களை மக்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியுங்கள், கைகளை அடிக்கடி நன்றாகக் கழுவுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இந்த முன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால், உங்களுக்கு நான் மரியாதை கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











