twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் வெனம் 2 ட்ரெய்லர்... டாம் ஹார்டியின் சிறப்பான நடிப்பு... செப்டம்பர் வரை காத்திருங்க!

    By Deepa S
    |

    டெல்லி : கடந்த 2018ல் வெளிவந்து சர்வதேச அளவில் சிறப்பான கவனத்தை பெற்ற ஹாலிவுட் படம் வெனம்.

    காமிக் கேரக்டரை மையமாக வைத்து டாம் ஹார்டி நடிப்பில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

    தளபதி 65க்காக பிரமாண்டமாக தயாரான ஷாப்பிங் மால் செட்.. விஜய் சொன்ன ஒத்த வார்த்தை.. அப்படியே ஆஃப்! தளபதி 65க்காக பிரமாண்டமாக தயாரான ஷாப்பிங் மால் செட்.. விஜய் சொன்ன ஒத்த வார்த்தை.. அப்படியே ஆஃப்!

    கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    2ம் பாகம் தயார்

    2ம் பாகம் தயார்

    கடந்த 2018ல் வெளியாகி சர்வதேச அளவில் சிறப்பான கவனத்தை பெற்ற வெனம் படம். டாம் ஹார்டியின் சிறப்பான நடிப்பு மற்றும் டைரக்ஷனுக்கான இந்த படம் சிலாகிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே 34.31 கோடி ரூபாய் வசூலை இந்த படம் எட்டியது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாகம் தயாராகியுள்ளது.

    டாம் ஹார்டி லீட் ரோல்

    டாம் ஹார்டி லீட் ரோல்

    மார்வல் காமிக்ஸ் கேரக்டரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் மார்வல் டென்சென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஆன்டி செர்கிஸ் டைரக்ஷனில் உருவாகியுள்ள இநத படத்தில் டாம் ஹார்டி லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    செப்டம்பர் மாதத்தில் வெளியீடு

    செப்டம்பர் மாதத்தில் வெளியீடு

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் ஹாலிவுட்டின் சில படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூப்பர் விருந்து

    இந்நிலையில் தற்போது வெனம் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த வெனம் படத்தின் பார்ட் 2விற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். திட்டமிட்டபடி கொரோனா பாதிப்புகள் குறைந்த செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

    English summary
    Hollywood seems committed to return to movie theatres after taking some films directly to OTT last year
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X