நாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா?
சென்னை: நாளை மொத்தம் ஐந்து படங்கள் ரிலிஸ் ஆகின்றன. அதில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதியின் ஜுங்கா வெளியாகிறது.
ஜுங்கா
விஜய் சேதுபதி படம் என்றாலே ஏகபோகமான வரவேற்பு இருக்கும். நாளை (27-07-2018) விஜய் சேதுபதியோட ஜுங்கா திரைப்படம் ரிலிஸ் ஆகிறது.
கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விப்பின் இசையமைத்துள்ளார்.

மோகினி
வெள்ளிக்கிழமை என்றாலே பக்திகரமான நாள். ஆனால் அந்தநாளில் பேய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக த்ரிஷாவின் மோகினி திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
ரமணா மாதேஷ் இயக்கி இருக்கும் இப்படத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ஜாக்கி பாக்மனி, பூர்ணிமா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். அழகான பேயை பார்த்து ரசிங்க!
நட்புன்னா என்னானு தெரியுமா
நட்பைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்தாலும் வற்றாத கதை இருப்பதனால் இந்த படமும் தயாராகியுள்ளது. சிவக்குமார் அரவிந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் டிவி புகழ் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. தரன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.
இவற்றுடன் ஜே. மோகனின் இயக்கத்தில் முரளி, உதயதாரா நடித்திருக்கும் பிரம்மபுத்ரா திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இளவட்ட பசங்க திரைப்படம் வெளியாகிறது.
கடந்த 13ஆம் தேதி ரிலீஸ் ஆன கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் பல திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்படம் இரண்டாம் பாகமும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











