பாலிவுட் சார்பட்டா பரம்பரையா Toofan.. தூள் கிளப்பியதா? இல்லை தூள் தூளா நொறுங்கியதா?
மும்பை: தியேட்டர்கள் திறந்து இருந்தாலே ஒரு நாளைக்கு அரை டஜன் படங்கள் வெளியாகிவிடும். ஒடிடி என்றால் சொல்லவா வேண்டும். பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட படங்கள், வெப்சீரிஸ் என வெள்ளிக்கிழமை அதுவுமாக பல படங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
அருவி இயக்குநரின் வாழ், அமலா பாலின் குடி எடமாயித்தே மற்றும் பாலிவுட் படமான Toofan உள்ளிட்ட படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி உள்ளன.
பாக்ஸிங்கை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகி உள்ள Toofan படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் கூறியிருக்கும் கருத்தை இங்கே காண்போம்.

டூஃபேன்
இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் அமேசான் பிரைமில் இன்று வெளியாகி உள்ள படம் தான் டூஃபேன். மும்பை டோங்கிரி ஏரியாவில் லோக்கல் டானாக இருக்கும் அலி (பர்கான் அக்தர்) எப்படி பாக்ஸிங் சாம்பியனாக மாறுகிறான் என்பது தான் கதை.

படு மொக்கை
2013ம் ஆண்டு பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர் நடிப்பில் வந்த பாகா மில்கா சிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது. அதே போல இந்த ஸ்போர்ட்ஸ் படமும் இருக்கும் என எதிர்பார்த்து ஒடிடியை ஆன் பண்ண ரசிகர்களுக்கு படு மொக்கையான படமே கிடைத்திருப்பதாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

படுத்தி எடுத்துட்டாங்க
ஏற்கனவே 2 மணி நேரம் படம் வச்சு செஞ்சது போதாதுன்னு கடைசி ஒரு மணி நேர டிரெயினிங் ஆரம்பம் என விமர்சித்து இருக்கும் இந்த நெட்டிசன், கடைசி ஒரு மணி நேரம் படுத்தி எடுத்துட்டு பக்கவா டார்ச்சர் பண்ணி அனுப்புறாங்க என கலாய்த்துள்ளார்.

லவ் ஜிகாத்
பர்கான் அக்தரின் Toofan திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படம் லவ் ஜிகாத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் பாக்ஸிங்கிற்கு முக்கியத்துவமே இல்லை என கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆர்யாவுக்கு வாழ்த்து
சமீபத்தில் நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலரை பார்த்து விட்டு டூஃபேன் படத்தின் ஹீரோ பர்கான் அக்தர் ஆர்யாவை வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார். அதை பார்த்த நம்ம ஊர் ரசிகர்கள் எல்லாம் இந்த படம் சார்பட்டா படம் போல இருக்கும் என பார்த்து ஏமாந்து போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











