twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதலிடத்தில் யார்.. 2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த இயக்குநர்கள் இவங்கதான்!

    |

    சென்னை: சினிமாவை பொறுத்தவரை கேப்டன் ஆஃப் தி ஷிப் இயக்குநர்கள் தான். ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றாலும், சூப்பர் ஹிட் ஆனாலும் அதற்கான முழுப் பொறுப்பும் பாராட்டுக்களும் இயக்குநர்களைத் தான் சேரும்.

    படம் பிளாக்பஸ்டர் ஆனால், ஹீரோவுக்கு கிரெடிட் கிடைக்கும். ஆனால், பெரிய எதிர்பார்ப்பில் படம் வெளியாகி ஓடவில்லை என்றால், அந்த ஹீரோவின் ரசிகர்கள் உள்பட பலரும் அந்த இயக்குநரைத் தான் திட்டித் தீர்ப்பார்கள்.

    2019ம் ஆண்டில் பல வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன. சில நல்ல படங்கள் வசூலை வாரிக் குவிக்கவில்லை என்றாலும் இயக்குநருக்கு விமர்சன ரீதியாக புகழைத் தேடித் தந்துள்ளன.

    2019ம் ஆண்டில் சிறந்த படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்த டாப் 10 இயக்குநர்கள் யார் யார் என்று பார்ப்போமா..

    10. நெல்சன் வெங்கடேசன்

    10. நெல்சன் வெங்கடேசன்

    ஸ்பைடர், மெர்சல் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவை பரம சாதுவாக மாற்றி ஒரு எலியுடன் போட்டி போடும் அளவுக்கு மாற்றி மான்ஸ்டர் படத்தை கொடுத்து அசத்தியவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். ஒரு நாள் கூத்து படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் தமிழ் ரசிகர்கள் வெகுவாக ரசித்துப் பார்த்தனர்.

    9. ஜெகதீசன் சுப்பு

    9. ஜெகதீசன் சுப்பு

    ஒட்டகத்தை வைத்து இப்படியொரு படத்தை கொடுக்க முடியுமா என்று தமிழ் திரையுலகையே மிரள வைத்தவர் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு. விக்ராந்துக்குள் இருக்கும் நல்ல நடிகனை வெளிக்கொண்டு வந்த பெருமையும் இவரைத் தான் சேரும். பாக்ஸ் ஆஃபிஸில் வசூலைக் குவிக்க வில்லை என்றாலும் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் இதுவும் ஒன்றுதான்.

    8. ரத்னகுமார்

    8. ரத்னகுமார்

    மேயாத மான் படத்தை இயக்கி முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்த இயக்குநர் ரத்னகுமார், இந்த ஆண்டு அமலா பாலின் ஆடை படத்தின் மூலம் பிரான்க் ஷோக்களுக்கு ஒரு சவுக்கடி கொடுத்தார். விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

    7. ராம்

    7. ராம்

    மம்மூட்டி, சாதனா, அஞ்சலி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேரன்பு படம் ரிலீசுக்கு முன்பே உலகளவில் பல விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்து பின்னர் தமிழ் ரசிகர்கள் பார்வைக்காக வெளியானது. தியேட்டர்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், பிளாஸ்டிக் சைல்ட் குறித்த படத்தை இயக்கிய இயக்குநர் ராமுக்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்தன.

    6. தியாகராஜா குமாரராஜா

    6. தியாகராஜா குமாரராஜா

    விஜய்சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் ஃபாசில் என பல திறமையான நடிகர்களை வைத்து இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புது விதமான படைப்பான சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த ஆண்டு கொடுத்திருந்தார். ஆனால், இந்த படமும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

    5. மகிழ் திருமேனி

    5. மகிழ் திருமேனி

    சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வைத்து தப்பு செய்து விட்டு எப்படி தப்பிக்க முடிகிறது என்பதை அப்பட்டமாக தடம் படத்தின் மூலம் இயக்குநர் மகிழ் திருமேனி வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அருண் விஜய்க்கு ஹீரோவாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

    4. பிரதீப் ரங்கநாதன்

    4. பிரதீப் ரங்கநாதன்

    யூடியூபில் இருந்து வந்து தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி இயக்குநராக மாறியுள்ளார் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். காமெடி, சென்டிமென்ட் என்ற இரு விஷயங்களை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி கொடுத்து தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்தது மட்டுமின்றி ஜெயம் ரவிக்கு ஒரு பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டையும் கொடுத்துள்ளார்.

    3. பார்த்திபன்

    3. பார்த்திபன்

    பார்த்திபன் இயக்கத்தில் அவரே தயாரித்து நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் இந்த ஆண்டு சிறந்த இயக்கத்தை பெற்றிருந்தது. அதிக பொருட்செலவு செய்யாமல், ஒரே அறையில், ஒரே நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் செம்ம ஸ்ட்ராங்கான படமாக இந்த படம் இருந்தது.

    2. லோகேஷ் கனகராஜ்

    2. லோகேஷ் கனகராஜ்

    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்த ஆண்டு கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படம் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவ்ளோ ஸ்பீடான திரைக்கதை மற்றும் தெறிக்க விடும் ஸ்டன்ட் காட்சிகள், பாடல்கள் இல்லை ஹீரோயின் இல்லை ஆனாலும், கார்த்தியி நடிப்பு ரசிகர்களை கடைசி வரை என்டர்டெயின் செய்து சீட் எட்ஜ் த்ரில்லராக மெர்சலாக உருவானதற்கு காரணம் அதன் கேப்டன் ஆஃப் தி ஷிப் லோகேஷ் தான். அடுத்த ஆண்டு தளபதி 64 படம் எப்படி இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    1.வெற்றிமாறன்

    1.வெற்றிமாறன்

    ஹாலிவுட் இயக்குநர்கள் போல தொடர்ந்து நல்ல நாவல்களை திரைப்படங்களாக மாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருதுகளை பேக் பண்ணி வையுங்கப்பா என சொல்லும் அளவுக்கு, நேர்த்தியாகவும், ஆழமாகவும் திரைக்கதையை அமைத்து கதை சொல்கிறார் இந்த இயக்கத்தின் அசுரன்.

    2019ல் யார் சிறந்த சினிமா இயக்குநர்.. உங்கள் கருத்தை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு!

    English summary
    Here is the list of top 10 best directors of kollywood this year. Vetrimaaran, Lokesh Kanagaraj, Parthiban, Pradeep Ranganathan, Thiyagaraja Kumararaja spot the top places.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X