தரமான கதை...மக்களை பேச வைத்த 2021 ம் ஆண்டின் சிறந்த டாப் 10 தமிழ் படங்கள்
சென்னை : 2021 ம் ஆண்டில் தரமான கதை, நல்ல பொழுதுபோக்கு, மக்களின் மனங்களை கவர்ந்து பேச வைத்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்டு, பெரிய வரவேற்பை பெற்ற படங்கள் மற்றும் அவைகள் பெற்ற ரேட்டிங் சதவீதங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டவையாகும்.

முதலிடத்தில் ஜெய்பீம்
இந்த பட்டியலில் 72 சதவீதம் ரேட்டிங்குடன் சூர்யாவின் ஜெய்பீம் படம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட சில படங்களும் இடம்பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

டாப் 10 படங்கள்
2021 ன் டாப் 10 சிறந்த தமிழ் படங்கள்
1 . ஜெய்பீம் (72 %)
2 . சார்பேட்டா பரம்பரை (70 %)
3. மாநாடு (68 %)
4. கர்ணன் (68%)
5. மண்டேலா (66 %)
6. டாக்டர் (63%)
7. ரைட்டர் (62 %)
8. கடைசில பிரியாணி (62%)
9. ராக்கி (61 %)
10. கசடதபற (61%)

வரவேற்பை பெற்ற படங்கள்
இதில் ஜெய்பீம் படம் சாதிய பிரச்சனைகளுக்கு எதிரானதாகவும், சார்பேட்டா பரம்பரை அந்த கால அரசியலையும் குத்துச் சண்டை போட்டியையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பை பெற்று, அனைத்து தரப்பினரிடமும் பாராட்டையும் பெற்றது.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்
ட்விட்டரில் Movie Crow வெளியிட்டுள்ள இந்த பட்டியலுக்கு நெட்டிசன்கள் வரவேற்பும் எதிர்ப்பும் கலந்ததாக கமெண்ட் செய்துள்ளனர். ஏராளமானோர் மாஸ்டர் படத்தை காணவில்லை என்றும், சிலர் ருத்ர தாண்டவம் படத்தை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications