twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Top 10 Songs 2022: அரபிக்குத்து முதல் மல்லிப்பூ வரை.. இந்த ஆண்டு ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்!

    |

    சென்னை: 2022ம் ஆண்டு எப்படி இருக்கப் போகுதோ என ஒட்டுமொத்த உலகமே பயந்து கிடந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், சினிமா துறையும் செழிப்படைய ஆரம்பித்து விட்டது.

    இந்த ஆண்டு எதிர்பார்த்த படங்கள் சொதப்பியும், எதிர்பார்க்காத படங்கள் ஹிட் கொடுத்தும் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ் சினிமாவில் நிகழ்த்தி உள்ளன.

    படங்களை தாண்டி அதில் உள்ள பாடல்கள் வழக்கம் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் கவர்ந்து விடும். அப்படி பலரையும் கவர்ந்து அடிக்கடி முணுமுணுக்க வைக்கும் டாப் 10 பாடல்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

    மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம்.. காதலுக்கு உருவம் தடையில்லை என நிரூபிக்கும் ரவீந்தர்! மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம்.. காதலுக்கு உருவம் தடையில்லை என நிரூபிக்கும் ரவீந்தர்!

    10. சும்மா சுர்ருன்னு

    சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்ற சும்மா சுர்ருன்னு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அர்மான் மாலிக் மற்றும் நிகிதா காந்தி இருவரும் இணைந்து பாடிய இந்த பாடலில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் போட்ட துள்ளலான ஆட்டம் ரசிகர்களை அடிக்கடி இந்த பாடலை பார்க்க வைத்து ஹிட்டாக்கியது. யூடியூபில் இந்த வீடியோ பாடல் 20 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

    9. நாங்க வேறமாறி

    போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான நாங்க வேறமாறி பாடல் அஜித் ரசிகர்களை வெகுவாக ஆட்டம் போட வைத்தது. யுவன் மற்றும் அனுராக் குல்கர்னி பாடிய இந்த பாடல் யூடியூபில் 23 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

    8. ஜலபுல ஜங்

    இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் நடனமாட வைத்தது. ரோகேஷ் வரிகளில் அனிருத் பாடிய இந்த பாடல் வீடியோ 46 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

    7. டூ டூ டூ

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனிருத் இசையில் வெளியான டூ டூ டூ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத், சுனிதி சவுகன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சி பாடிய இந்த பாடல் 84 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

    6. பொன்னி நதி

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் ஏகப்பட்ட ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. நடிகர் விஜய்யின் ஃபேவரைட் பாடல் என்றும் தகவல்கள் வெளியாகின. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் வெளியான இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மறைந்த பாடகர் பம்பா பாக்யா உள்ளிட்டோர் இணைந்து பாடினர். பொன்னி நதி பாட்டு மட்டுமின்றி, ராட்சச மாமனே, தேவாரளன் ஆட்டம் உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

    5. நாட்டுக்கூத்து

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி 450 கோடி வசூல் செய்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த வயதிலும் கமல்ஹாசன் இப்படி ஆடுறாரே என அனைவரும் வாய் பிளந்து பார்த்தனர். அனிருத் இசையில் கமல் எழுதி பாடிய பாடல் இது. விக்ரம் படத்தில் போர் கொண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வருகிறான், ஈகிள் இஸ் கம்மிங் என அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.

    4. பத்தல பத்தல

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி 450 கோடி வசூல் செய்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த வயதிலும் கமல்ஹாசன் இப்படி ஆடுறாரே என அனைவரும் வாய் பிளந்து பார்த்தனர். அனிருத் இசையில் கமல் எழுதி பாடிய பாடல் இது. விக்ரம் படத்தில் போர் கொண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வருகிறான், ஈகிள் இஸ் கம்மிங் என அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.

    3. மேகம் கருக்காதா

    இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு DnA காம்போ இணைந்த நிலையில், ஒட்டுமொத்த ஆல்பமே சூப்பர் ஹிட் அடித்தது. தாய்க்கிழவி, தேன்மொழி, மயக்கமா கலக்கமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. மேகம் கருக்காதா பாடல் மற்றும் நடனக் காட்சிகள் அனைத்திலும் டாப்பாக உள்ளது. தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் வேறலெவல் ஹிட்.

    2. மல்லிப்பூ

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல் தான். அதில், மிகவும் சிறப்பாக பலரையும் கவர்ந்த மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே பாடல் இடம்பெற்றுள்ளது. தாமரை வரிகளில் மதுஸ்ரீ பாடிய இந்த பாடல் 53 மில்லியன் வியூஸை அள்ளி உள்ளது.

    1. அரபிக் குத்து

    இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 320 மில்லியன் வியூஸை கடந்து உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடிய இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்த ஆண்டு டாப் 10 பாடல்கள் லிஸ்ட்டில் இணைய இப்பவே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. இந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்த பாட்டு இருக்குதா? என்றும் இல்லாத பாடல்களையும் கமெண்ட்டில் பதிவிடவும்.

    English summary
    Top 10 Best Tamil Songs of 2022: Arabic Kuthu to Mallipoo are top in the charts. Anirudh Ravichander and AR Rahman maxmimum ruled the Kollywood this year. Please check your favorites songs in the list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X