twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இர்ஃபான் கான்.. சுஷாந்த் சிங் முதல் ஆர்யா பானர்ஜி வரை.. 2020ல் பாலிவுட்டை உலுக்கிய டாப் 10 மரணங்கள்!

    |

    மும்பை: 2020ஆம் ஆண்டில் இர்ஃபான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புத் என அடுத்தடுத்து பாலிவுட் நட்சத்திரங்களின் அகால மரணம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    2020ஆம் ஆண்டில் கொரோனா ஒரு பக்கம் ஆட்டிப்படைத்ததால் சினிமா தொழில் முற்றிலும் முடங்கியது. இதையும் தாண்டி பாலிவுட் சினிமாவில் பல அகால மரணங்களும் தற்கொலைகளும் பாலிவுட் சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் உலுக்கியது.

    அந்த வகையில் இர்ஃபான் கான் மற்றும் சுஷாந்த் சிங்கின் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2020 ஆம் ஆண்டு விடைபெறவுள்ள நிலையில் பாலிவுட் சினிமா சந்தித்த இழப்புகள் குறித்து ஒரு ரவுண்ட் அப்..

    இந்த ஆண்டின் டாப் 10 ஒடிடி திரைப்படங்கள்.. சூரரைப் போற்று முதல் பெண்குயின் வரை.. எந்த படம் டாப்?இந்த ஆண்டின் டாப் 10 ஒடிடி திரைப்படங்கள்.. சூரரைப் போற்று முதல் பெண்குயின் வரை.. எந்த படம் டாப்?

    நடிகர் இர்ஃபான் கான்

    நடிகர் இர்ஃபான் கான்

    பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி காலமானார். 53 வயதான இர்ஃபான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

    நடிகர் ரிஷி கபூர்

    நடிகர் ரிஷி கபூர்

    இர்ஃபான் கான் இறந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் ஒரு பேரிழப்பை சந்தித்தது பாலிவுட். அதாவது மூத்த நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் மரணமடைந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர். இதற்காக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை திரும்பினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது உடல் நிலை மோசமடைந்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

    நடிகர் மோஹித் பாகெல்

    நடிகர் மோஹித் பாகெல்

    அடுத்தடுத்து இரண்டு நடிகர்களை இழந்த இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் பாலிவுட்டின் இளம் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் கடந்த மே மாதம் 23ஆம் தேதி உயிரிழந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மோஹித் தனது 27 வயதில் அகால மரணமடைந்தார். 'உவா', 'மிலன் டாக்கீஸ்' சல்மான் கானுடன் 'ரெடி', பரினீதி சோப்ராவுடன் 'ஜபாரியா ஜோடி' உள்ளிட்ட படங்களில் மோஹித் நடித்துள்ளார்.

    வாஜித் கான்

    வாஜித் கான்

    பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் கடந்த ஜூன் 1ஆம் தேதி மரணமடைந்தார். பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த வாஜித் கான் தன்னுடைய 42 வயதில் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃப் அலிகானின் வாரிசுகளான பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்கள்தான் சாஜித் - வாஜித். இவர்கள் இருவரும் தபாங், ஏக் தா டைகர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சல்மான் கானின் பியார் கியா தோ தர்ணயா கியா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானதால் சல்மான் கானின் ஆஸ்தான் இசையமைப்பாளர்களாக இந்த சகோதர்கள் இருந்தனர். பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் கடந்த ஜூன் 1ஆம் தேதி மரணமடைந்தார். பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த வாஜித் கான் தன்னுடைய 42 வயதில் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃப் அலிகானின் வாரிசுகளான பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்கள்தான் சாஜித் - வாஜித். இவர்கள் இருவரும் தபாங், ஏக் தா டைகர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சல்மான் கானின் பியார் கியா தோ தர்ணயா கியா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானதால் சல்மான் கானின் ஆஸ்தான் இசையமைப்பாளர்களாக இந்த சகோதர்கள் இருந்தனர்.

    பாசு சட்டர்ஜி

    பாசு சட்டர்ஜி

    பழம் பெரும் பாலிவுட் இயக்குநராக பாசு சட்டர்ஜியும் 2020 ஆம் ஆண்டு மரணமடைந்த திரை பிரபலங்களில் ஒருவர். 90 வயதான பாசு சட்டர்ஜி, கடந்த ஜூன் 4 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக காலமானார். சோட்டி சி பாட், சிட்சோர், ரஜினிகாந்தா, பியா கா கர் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர். இந்தி மட்டுமின்றி பெங்காலி படங்கள் மற்றும் டிவி சீரியல்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுஷாந் சிங் ராஜ்புத்

    சுஷாந் சிங் ராஜ்புத்

    பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமான 36 வயதே ஆன இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூம் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா கொலையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவரது மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சரோஜ் கான்

    சரோஜ் கான்

    பாலிவுட்டின் பிரபல நடன இயக்குரான சரோஜ் கடந்த ஜூலை 3ஆம் தேதி தனது 71 வயதில் காலமானார். கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருந்த சரோஜ் கான் 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் ஜக்தீப்

    நடிகர் ஜக்தீப்

    அவரை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் ஜக்தீப் கடந்த ஜூலை 8ஆம் தேதி தனது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81. சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஷோலே படத்தில் இவரது காமெடி ரசிகர்களிடையே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஜக்தீபை, இளம் நடிகராக அறிமுகப்படுத்தியது ஏவிஎம் நிறுவனம். பாபி, பர்கா, பிந்தயா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். ரமேஷ் சிப்பி இயக்கிய பிரம்மச்சாரி என்ற படம் மூலம் காமெடியனாக ஆனார். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார்.

    நிஷிகாந்த் கமத்

    நிஷிகாந்த் கமத்

    பாலிவுட், தமிழ் மற்றும் மராத்தி படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் நிஷிகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தனது 50 வயதில் காலாமானார். கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி, திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிஷிகாந்த் ஹைதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மஞ்சள் காமாலை நோய் இருப்பதை அறிந்தனர். அவர் வயிற்றிலும் பிரச்னை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

    நடிகை ஆர்யா பானர்ஜி

    நடிகை ஆர்யா பானர்ஜி

    பிரபல பாலிவுட் மற்றும் பெங்காலி மொழி நடிகை ஆர்யா பானர்ஜி கடந்த 11ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    33 வயதான ஆர்யா பானர்ஜியின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆர்யா பானர்ஜி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood cinema industry has lost some of the noted celebrities in 2020. From Irrfan, Sushant Singh Rajput to Saroj Khan and Rishi Kapoor, here are the legends who left us in 2020.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X