Vijay: எக்ஸ் தளம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. மாஸ் காட்டிய விஜய்!

சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்த டாப் 10 பட்டியலை எக்ஸ் தளப்பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் தளபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அண்மைக்காலமாக இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Top 10 list of most talked about Indian in September has been released by X,

இதைபோல பல திரைப்பிரபலங்களும் மக்களுடனான தங்களது தொடர்பை நெருக்கமாக வைத்துக்கொள்ள சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றனர்.

எக்ஸ் தளத்தின் டாப் 10 லிஸ்ட்: அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 கணக்கு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், மூன்றாவது இடத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானும், நான்காவது இடத்தில் தளபதி விஜய்யும், ஐந்தாவது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம் பிடித்துள்ளனர்.

விஜய்க்கு எந்த இடம்: மேலும் ஆறாவது இடத்தில் தெலுங்கு நடிகர் பவண் கல்யாணும், 7வது இடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும், 8வது இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், 9வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், 10-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் இடம்பிடித்துள்ளனர்.

சை வெளியீட்டு விழா ரத்து: இந்த டாப் பத்து வரிசையில் விஜய் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த மாதம் லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ரத்தானதால், ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இதனால், தளபதி விஜய் குறித்த செய்திகள் இணையத்தில் கடந்த மாதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது. இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், படம் வெளியாவதற்கு முன்பாக அக்டோபர் 12ந் தேதி பிரம்மாண்ட பிரஸ் மீட் ஒன்றை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X