»   »  உலகநாயகன், தல, தளபதி, சீயான்... 2015ல் ஜெயிப்பது யார்?

உலகநாயகன், தல, தளபதி, சீயான்... 2015ல் ஜெயிப்பது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

2014ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜீத், இளையதளபதி விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், என பல தரப்பட்ட ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், சினிமா விமர்சகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்தது.

2015ஆம் ஆண்டிலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகிவருகின்றனர் ஹீரோக்கள். இந்த ஆண்டு இயக்குநர் ஷங்கரின் ‘ஐ' படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல விஜய் நடித்து வரும் புலி, அஜீத்தின் என்னை அறிந்தால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் 2015ல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விக்ரமின் ‘ஐ’

விக்ரமின் ‘ஐ’

ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ' திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு காத்துக்கொண்டிருக்கிறது. விக்ரம், எமி ஜாக்ஸன், நடித்துள்ள இந்த ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் பொங்கல் ரேஸில் ‘ஐ' முந்தி நிற்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் 2006ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக ஷங்கருடன் இணைந்துள்ளார் விக்ரம். இந்த படமும் ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பள

ஆம்பள

ஐ படத்துடன் போட்டி போடும் மற்றொரு படம் ‘ஆம்பள' ஐ யின் பிரம்மாண்டத்திற்கு முன்பு போட்டி போட அஞ்சி நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் தில்லாக களம் இறங்குகிறார் விஷால். ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள ஆம்பள திரைப்படத்தை சுந்தர். சி இயக்கியுள்ளார். ஐ படத்துடன் மோதுவதால் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

‘தல’ அஜீத்

‘தல’ அஜீத்

கவுதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் ஹீரோவாக அஜித் நடிக்க அவருடன் அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றது. டீசரை மட்டும் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்' செய்தும் இருக்கிறார்கள்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

பொங்கல் பண்டிகைக்கு என்னை அறிந்தால் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 29ஆம் தேதிக்கு வெளியாகிறது என்னை அறிந்தால் படம். படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் தெரியும் எத்தனை பேர் இந்த படத்தை லைக் செய்வார்கள் என்று.

கொம்பன்

கொம்பன்

கார்த்தி நடித்த கொம்பன் படத்தில் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி மேனன். ராஜ்கிரண் நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்தது. இப்போது பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி சிவகார்த்திக்கேயனுக்கு தனி அந்தஸ்தை கொடுத்தது. இதே ஜோடி மீண்டும் இணைந்துள்ள படமான காக்கிச்சட்டை படத்தை துரை செந்தில்குமார் இயக்க அனிருத் இசையடைத்துள்ளார். சிவகார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா ஜோடி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே உள்ளது. பொங்கல் ரேஸில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாஸ் சூர்யா

மாஸ் சூர்யா

அஞ்சான் தோல்விக்குப் பின்னர் சூர்யா நடிக்கும் படம் மாஸ். பிரியாணி சொதப்பியதில் மாஸ் படத்தை கவனமாக இயக்கி வருகிறார். ஆதவன் படத்திற்குப் பின்னர் சூர்யா உடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் ப்ரணீதா, பிரேம்ஜி அமரன், ஜெயராம், பார்த்தீபன், சமுத்திரகனியும் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொங்கலுக்கு டீசர்?

பொங்கலுக்கு டீசர்?

மாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகைக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வஐம் நிலையில் ஏப்ரல் 14 அன்று மாஸ் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகநாயகனின் மூன்று படங்கள்

உலகநாயகனின் மூன்று படங்கள்

உலக நாயகன் கமலின் மூன்று படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக தயாராக உள்ளன. உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்கள் தயாராக உள்ளதால் கமல் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சூப்பர் ட்ரீட் காத்திருக்கிறது.

காதல், திரில்லர்

காதல், திரில்லர்

நாடக நடிகனாக ஒரு படத்திலும், குடும்பத்தலைவராக ஒரு படத்திலும், உளவாளியாக மற்றொரு படத்திலும் வெரைட்டி காட்டியுள்ளார் கமல் இதில் எந்த படம் முதல் வெளியாகி வெற்றிவாகை சூடப்போகிறதோ? ரசிகர்கள் கையில்தான் உள்ளது.

தளபதியின் புலி

தளபதியின் புலி

விஜய் நடித்த கத்தி சர்ச்சைகளுக்கு இடையேயும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு புலி என்ற தலைப்பே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிம்புத்தேவன் இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள புலி ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல 56

தல 56

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் நடித்து வருகிறார். இதற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. ‘தல 56' என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தீபாவளி ரேஸில் தளபதியுடன் மோதுவார் தல என்று இப்போதே ஜோசியம் சொல்கின்றனர் ரசிகர்கள்.

அநேகன்

அநேகன்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அநேகன். வேலையில்லா பட்டதாரி வெற்றிக்குப் பின்னர் தனுஷ் நடித்த படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

விக்ரம் சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் பத்து எண்றதுக்குள்ள. கோலிசோடா இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வரும் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரஜினி முருகன்

ரஜினி முருகன்

சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ரஜினி முருகன், தனுசின் மாரி, மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி ஆகிய திரைப்படங்களும் விறுவிறுப்பாக தயாராகிவருகின்றன. இந்த ஆண்டு பல படங்கள் களத்தில் இருந்தாலும் யார் வசூலில் வெற்றி வாகை சூடப்போகிறார்களோ பொருத்திருந்து பார்க்கலாம்.

English summary
This year, Tamil film industry has an interesting line-up of films and it remains to be seen how each of them fare at the box office. From Ajith's "Yennai Arindhaal" to Vijay's "Puli," check out the top 10 most-awaited Tamil films of 2015.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil