TN Box office 2023: டாப் 10 தமிழ்ப்படங்களின் தமிழ்நாட்டு வசூல் நிலவரம்.. இதுலயும் தளபதிதான் டாப்!

சென்னை: 2023ம் ஆண்டு இப்பொழுதுதான் துவங்கியதை போல உள்ளது. ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கல் கொண்டாட்டமாக அஜித், விஜய் படங்கள் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் அதற்குள்ளாக 6 மாதங்களை நாம் கடந்துள்ளோம். இந்த ஆறு மாதங்களில் அதிகமான படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களுக்கு கூடுதல் என்ஜாய்மெண்டை கொடுத்துள்ளன.

மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களும் ரிலீசாகவுள்ளன. அதற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

Top 10 movies in TN box office from the past 6 months

தமிழக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இடம்பெற்ற முதல் 10 படங்கள்: 2023ம் ஆண்டில் நாம் முதல் 6 மாதங்களை சிறப்பாக கடந்துள்ளோம். மற்றத் துறைகளில் வளர்ச்சி எப்படி இருக்கிறதோ என்னவோ, சினிமாவிற்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே பொங்கல் ஸ்பெஷலாக விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தன. பல ஆண்டுகளை கடந்து இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகின.

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் இருவேறு ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. துணிவு படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு வெளியான நிலையில், வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. லியோ என்ற படத்திற்கு முன்னதாக லைட்டான சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்து விஜய் நடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்து அறிவிப்புடன் நின்றுள்ளது. படத்தின் இயக்குநரும் உறுதியாகியுள்ள நிலையில், எப்பொழுதுதான் சூட்டிங் துவங்கும் என்று ரசிகர்கள் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் படங்களை தொடர்ந்து மணிரத்னத்தின் கனவு படத்தின் இரண்டாவது பாகம் பொன்னியின் செல்வன் 2 என வெளியானது. முதல் பாகத்தை போல அந்தளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்றபோதிலும் இந்தப் படமும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்தது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், படம் வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை, உதயநிதியின் கடைசி படமாக வெளியான மாமன்னன், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான தனுஷின் வாத்தி ஆகிய படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றாமல் சிறப்பான என்ஜாய்மெண்டை கொடுத்தன. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, டாடா, போர்த்தொழில், போன்ற படங்களும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தன.

இந்நிலையில் இந்த 6 மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகி தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் சூப்பர் வசூலை குவித்த 10 படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 146.10 கோடி வசூலுடன் விஜய்யின் வாரிசு படம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் 140.70 கோடியுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. மூன்றாவது இடத்தில் அஜித்தின் துணிவு படம் 116. 40 கோடி ரூபாய் வசூலுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Top 10 movies in TN box office from the past 6 months

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே 40.20 கோடி மற்றும் 38.00 கோடி கலெக்ஷனுடன் விடுதலை மற்றும் மாமன்னன் படங்கள் காணப்படுகின்றன. தனுஷின் வாத்தி படம் 35.20 கோடியும், சரத்குமார் -அசோக்செல்வன் கூட்டணியில் வெளியான போர்த்தொழில் படம் 26.00 கோடியும், சிம்புவின் பத்து தல 25.80 கோடியும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் 20.30 கோடியும் கவினின் டாடா படம் 20.20 கோடி ரூபாய் கலெக்ஷனையும் தமிழகத்தில் செய்துள்ளன.

சர்வதேச அளவில் இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்கள் அதிகமாக காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டுமே இந்தப் படங்கள் இத்தனை கோடி கலெக்ஷனை அள்ளியுள்ளன. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். குறிப்பாக சிறப்பான கதைக்களம் இருந்தால் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்பதற்கு டாடா, போர்த்தொழில் படங்களின் வெற்றி மிகச்சிறந்த உதாரணங்களாக அமைந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X