For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த ஆண்டின் டாப் 10 ஒடிடி திரைப்படங்கள்.. சூரரைப் போற்று முதல் பெண்குயின் வரை.. எந்த படம் டாப்?

  |

  சென்னை: இந்த ஆண்டு சினிமா துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் மார்ச் மாதம் முதல் தியேட்டர்களை மூடிய நிலையில், புதுப்படங்கள் ரிலீசாக முடியாமல் தவித்தன.

  சினிமா தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வகையில், ஒடிடி தளங்கள் களமிறங்கி கல்லா கட்டின.

  ஒடிடியில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களும் பெரிய அளவில் சொதப்பின. ஆண்டு இறுதியில் ஒடிடியில் வெளியான சில படங்கள் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.

  அந்த வகையில், இந்த ஆண்டு ஒடிடியில் வெளியாகி கவனம் ஈர்த்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை இங்கே காண்போம்.

  டோட்டல் டேமேஜ்.. அன்பு கேங்கின் ஆட்டம் காலி.. இதற்குத்தான் ஆசைப்பட்டாயா அர்ச்சனா.. ரசிகர்கள் கலாய்!டோட்டல் டேமேஜ்.. அன்பு கேங்கின் ஆட்டம் காலி.. இதற்குத்தான் ஆசைப்பட்டாயா அர்ச்சனா.. ரசிகர்கள் கலாய்!

  10. டேனி

  10. டேனி

  இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான டேனி திரைப்படம் ஜி5 ஒடிடி தளத்தில் வெளியானது. போலீஸ் அதிகாரியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் மிரட்டி இருந்தார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நாய் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது.

  9. ஒன்பது குழி சம்பத்

  9. ஒன்பது குழி சம்பத்

  இயக்குநர் ஜா ரகுபதி இயக்கத்தில் பாலாஜி மகாராஜா, நிகிலா விமல் மற்றும் அப்புக்குட்டி நடிப்பில் வித்தியாசமான கிராமத்து கதையை மையமாக வைத்து வெளியான ஒன்பது குழி சம்பத் திரைப்படம் இந்த ஆண்டு 9வது இடத்தை பிடித்துள்ளது. ரிலீசான வாரத்தில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்த படம் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  8. பெண்குயின்

  8. பெண்குயின்

  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான பெண்குயின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது. வித்தியாசமான முயற்சியாக உருவான இந்த படம் ஏகப்பட்ட சைக்கோ படங்களின் காப்பி என்றும், சுவாரஸ்யமாக இல்லை என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

  7. சைலன்ஸ்

  7. சைலன்ஸ்

  மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் என ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட்டுடன் வித்தியாசமான முயற்சியாக இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கிய சைலன்ஸ் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படமும் விமர்சன ரீதியாக அடிவாங்கியது.

  6. பொன்மகள் வந்தாள்

  6. பொன்மகள் வந்தாள்

  யாருடா அந்த பூனைக்கு மணிக்கட்டுவது என ஒடிடியில் நேரடியாக திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் உள்ளதாக இந்த படத்தின் மீதும் விமர்சனங்கள் குவிந்தன.

  5. புத்தம் புது காலை

  5. புத்தம் புது காலை

  தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமேசான் பிரைமில் 5 இயக்குநர்கள் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை திரைப்படம் இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தனித்தனி கதைகளாக இயக்கி இருந்தனர்.

  4. அந்தகாரம்

  4. அந்தகாரம்

  இயக்குநர் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தகாரம் திரைப்படம் இந்த ஆண்டு 4ம் இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் டவுன்லோடு பண்ண இந்த படம் காரணமாக இருந்தது. கைதி அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷன் லீடு ரோலில் நடித்த இந்த படத்தை விக்னராஜன் இயக்கி இருந்தார்.

  3. மூக்குத்தி அம்மன்

  3. மூக்குத்தி அம்மன்

  இயக்குநர் அவதாரம் எடுத்த ஆர்.ஜே. பாலாஜி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அம்மனாக மாற்றி நய்யாண்டி கலந்த சாமி படமாக எடுத்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்த ஆண்டு சிறந்த படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தீபாவளி ரிலீசாக வெளியான இந்த படத்தின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கலக்கியது மூக்குத்தி அம்மன்.

  2. க/பெ. ரணசிங்கம்

  2. க/பெ. ரணசிங்கம்

  ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் எல்லாம் படு மொக்கையாக இருக்கு என்கிற விமர்சனத்தை மாற்றி அமைத்த முதல் படமாக விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் இந்த ஆண்டு ஒடிடியில் பட்டையை கிளப்பியது. ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான நடிப்பும், இயக்குநர் விருமாண்டியின் கதைக்களமும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

  1. சூரரைப் போற்று

  1. சூரரைப் போற்று

  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. ஏர் டெக்கான் நிறுவ்னர் கோபிநாத்தின் பயோபிக்கை அடிப்படையாகக் கொண்டு புனைவாக எடுக்கப்பட்ட இந்த படம் பட்டித் தொட்டி முதல் சர்வதேச அளவில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

  English summary
  From Soorarai Pottru to Ponmagal Vanthal top 10 best OTT release movies of this 2020 year list is here. Suriya's Soorarai Pottru perfomed top notch.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X