டைவர்ஸ் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள்!

By Mayura Akilan

தமிழ் திரை உலகில் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். அந்த ஜோடி கடைசி வரைக்கும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாகவே இருப்பார்கள்.

திரையில் ஜோடி சேர்ந்தவர்கள் சில சமயத்தில் நிஜவாழ்க்கையிலும் இணைந்து விடுவார்கள். அவர்களின் திருமணத்தைப் பற்றித்தான் சில காலம் மீடியாக்களில் அடிபடும். சில நட்சத்திர தம்பதியர்கள் ரசிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவார்கள்.

சில நட்சத்திர ஜோடிகள் இணைந்த வேகத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுவார்கள். தமிழ் திரை உலகில் இணைந்து சில காலம் வாழ்ந்து பிரிந்த நட்சத்திர ஜோடிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

விஜயகுமாரி – எஸ்.எஸ்.ராஜேந்திரன்

விஜயகுமாரி – எஸ்.எஸ்.ராஜேந்திரன்

லட்சிய நடிகர் என்று போற்றப்படும் எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி ஜோடி பிரபலம் அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி திரையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணைந்து பின்னர் பிரிந்து விட்டனர்.

சரிதா-முகேஷ்

சரிதா-முகேஷ்

மலையாள நடிகர் முகேஷ் உடன் திருமணம் செய்த சரிதா பல காலம் இணைந்து வாழ்ந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றனர்.

கமல்ஹாசன் – சரிகா

கமல்ஹாசன் – சரிகா

நடிகர் கமல்ஹாசன் வாணி உடனான பிரிவிற்குப் பின்னர் சரிகாவை மணந்தார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆன நிலையில் 20 ஆண்டுகள் வாழ்ந்த அவர்கள் கடைசியில் பிரிந்து விட்டனர்.

ராதிகா – பிரதாப் போத்தன்

ராதிகா – பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தனுடன் இணைந்து நடித்த ராதிகா அவரையே தனது வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். சில காலம் வாழ்ந்த அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

சரத்குமார் – சாயா

சரத்குமார் – சாயா

சாயாவை காதலித்து கரம் பிடித்தவர் நடிகர் சரத்குமார். குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆனபின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.

ராமராஜன் – நளினி

ராமராஜன் – நளினி

திரைஉலகில் பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி நளினி-ராமராஜன். பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். திருமணத்திற்குப் பின்னர் நடிக்காமல் இருந்தார் நளினி. பின்னர் ஏற்பட்ட கருத்து மோதலில் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது நளினி சீரியல் நடிகையாகிவிட்டார்.

சீதா – பார்த்திபன்

சீதா – பார்த்திபன்

துணை இயக்குநராக இருந்தபோதே நடிகையாக அறிமுகமான சீதாவை காதலித்தவர் பார்த்தீபன். தன்னுடைய முதல் பட கதாநாயகியும் சீதா தான். எதிர்ப்புகளைத் தாண்டி இந்த ஜோடி இணைந்தது. இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின்னர் பிரிந்து விட்டனர்.

ரோகினி – ரகுவரன்

ரோகினி – ரகுவரன்

நடிகர் ரகுவரன் - நடிகை ரோகினி இடையேயான திருமணம் மகன் பிறந்த பிறந்த பின்னர் சில ஆண்டுகளில் கருத்து மோதல் வெடித்து பிரிவில் முடிந்தது.

பிரபுதேவா – ரம்லத்

பிரபுதேவா – ரம்லத்

நடன இயக்குநர் பிரபுதேவா, தன்னுடன் நடனமாடிய ரமலத்தை காதலித்து போராட்டத்திற்குப் பின்னர் கரம் பிடித்தார். மூன்று குழந்தைகள் பிறந்த பின்னர் மற்றொரு நடிகையுடன் ஏற்பட்ட காதலால் விவாகரத்து பெற்றார்.

பிரகாஷ்ராஜ் – லலிதாகுமாரி

பிரகாஷ்ராஜ் – லலிதாகுமாரி

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகை லலிதா குமாரி இடையே நடைபெற்ற திருமணம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மணவாழ்க்கை திடீரென்று முறிந்து போனது.

ஊர்வசி – மனோஜ். கே.ஜெயன்

ஊர்வசி – மனோஜ். கே.ஜெயன்

நடிகை ஊர்வசி, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு எர்ணாக்குளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

ரேவதி - சுரேஷ்மேனன்

ரேவதி - சுரேஷ்மேனன்

பிரபல நடிகையாக இருந்த போதே கேமரமேன் சுரேஷ்மேனன் உடன் காதல் ஏற்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பரஸ்பர விவாகரத்து கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X