twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021ல் வெளியான மிகச் சிறந்த 3 காமெடி திரைப்படங்கள்... ஜாலியான திரைக்கதை இயக்குனர்கள்

    |

    சென்னை: காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் திரைப்படங்கள் கட்டாயம் வெற்றி பெறுகின்றன

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் காமெடி படங்கள் என்பதால் இயக்குனர்கள் பலரும் காமெடி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    குடும்ப மானத்தை வாங்கும் பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்... சமந்தாவை குறி வைக்கும் நாக சைத்தன்யா?குடும்ப மானத்தை வாங்கும் பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்... சமந்தாவை குறி வைக்கும் நாக சைத்தன்யா?

    அந்தவகையில் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான மிகச்சிறந்த காமெடி படங்களை பற்றி இங்கு நாம் காண்போம்.

    டாக்டர்

    டாக்டர்

    கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த திரைப்படம் டாக்டர். இதுவரை தன்னுடைய படங்களில் கவுன்ட்டர்கள் மூலம் மற்றவர்களை கலாய்த்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் அப்படியே ஆப்போசிட்டாக அவ்வளவாக பேசாமல் சாந்தமாக நடித்திருப்பார். குழந்தைக் கடத்தலை பற்றி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவானது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்,விஜே அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய்,ரேடியன் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நேரடியாக ஓடி டியில் வெளியாக இருந்தது பின் படக்குழுவின் அதிரடி முடிவால் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது

    டிக்கிலோனா

    டிக்கிலோனா

    காமெடியனாக இருந்து இப்பொழுது ஹீரோவாக மாறி தனக்கென ஒரு மார்க்கெட்டை உயர்த்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடித்த டிக்கிலோனா திரைப்படம் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவானது. டைம் டிராவலிங்கை மையப்படுத்தியதாக உருவானது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த திரைப்படத்தில் முனீஸ் காந்த், ஆனந்தராஜ், யோகி பாபு,மொட்டை ராஜேந்திரன்,நிழல்கள் ரவி, மாறன் என பலர் நடித்திருந்தனர். இடைவிடாமல் ஒவ்வொரு காட்சியிலும் காமெடியில் தெறிக்கவிட்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த டிக்கிலோனா திரைப்படம் 2021ல் வெளியான மிகச்சிறந்த காமெடி திரைப்படமாக கொண்டாடப்பட்டது

    மலேசியா டு அம்னீஷியா

    மலேசியா டு அம்னீஷியா

    உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி பெற்று வந்த இயக்குனர் ராதாமோகன் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் இயக்கிய திரைப்படம் மலேசியா டு அம்னீஷியா. வைபவ், வாணி போஜன், எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த மலேசியா டு அம்னீஷியா நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது. 2021 இல் வெளியான மிகச்சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக மலேசியா டு அம்னீஷியா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும்

    ஒவ்வொரு ஆண்டும்

    தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எப்பொழுதும் ஒரு தனி ரசனையை ஏற்படுத்தி இந்திய சினிமாவிலேயே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களை மகிழ்விக்கும் பல திரைக்கதைகள் பலவிதமான இயக்குனர்கள் என்று முத்திரை பதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிறைய பேய் படங்கள், ஜாதி ரீதியான படங்கள், போலீஸ் அடக்குமுறை படங்கள், சமுதாய பிரச்சனைகளை தொடர்ந்து சொல்லி வரும் படங்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் காமெடி படங்கள் தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து எப்பொழுதும் குடும்பங்களுடன் கொண்டாடும் படங்களாக வெற்றி பெற்று வருகிறது. இதை மனதில் கொண்டு பல இயக்குனர்கள் மிகவும் சீரியசான படங்களை எடுப்பதை தவிர்த்து காமெடி படங்களை ஒரு மெல்லிய கோட்டில் திரைக்கதை அமைத்து தியேட்டர் வரும் ஆடியன்ஸ் சிரித்து மகிழ்ந்து வீட்டுக்கு செல்ல நல்ல காமெடி கதைகளை திரையில் காட்டுகின்றனர். சமூகத்திற்கு மிகவும் தேவையான இப்படிப்பட்ட காமெடி படங்கள் எப்பொழுதும் எந்த காலத்திலும் தேவைதான் என்பது நிதர்சனமான உண்மை

    English summary
    Top 3 Comedy Movies in Tamil 2021
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X