Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2021 ஆம் ஆண்டு கலக்கிய சிறந்த 3 தமிழ் ஆல்பம் பாடல்கள்!
சென்னை :தமிழ் ரசிகர்கள் என்னதான் திரைப்பட பாடல்களை கொண்டாடினாலும் ஆல்பம் பாடல்கள் மீதான மோகம் இன்னும் குறையவில்லை.
நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் பாடகர்களும் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிட்டு கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆல்பம் பாடலாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடல்களை பற்றி இங்கு நாம் காண்போம்
என்ஜாய் என்ஜாமி
சமீபகாலமாகவே தமிழ் திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருப்பவர் பாடகர் அறிவு. ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியதோடு பாடல்களை பாடியும் வரும் அறிவு பாடகி தீ உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாடல் என்ஜாய் என்ஜாமி. இந்தப் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வரிகளும் மிகப்பெரிய அழுத்தத்தை கொண்டு இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். அறிவின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். அறிவு மற்றும் தீ இணைந்து இப்பாடலை உருவாக்கியிருந்தார்கள்.
மிகப்பெரிய கவனத்தை
அமித் கிருஷ்ணன் இயக்கியிருந்த இந்தப் பாடலை ஏ ஆர் ரகுமானின் மஜ்ஜா தயாரித்திருந்தது. மொழிகளை கடந்து இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த என்ஜாய் என்ஜாமி
மிகப்பெரிய அளவில் இணையதளத்திலும் செம கலக்கு கலக்கி தனி கவனத்தை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. 2021 ஆம் ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகச்சிறந்த ஆல்பம் பாடலாக என்ஜாய் என்ஜாமி இடம் பிடித்துள்ளது .
குட்டி பட்டாஸ்
குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இப்பொழுது தமிழ் பெண்களின் கனவு கண்ணனாக மாறியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார் . படங்களில் ஒப்பந்தமாகி வரும் அதே சமயம் ஆல்பம் பாடல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான பாடல் குட்டி பட்டாஸ். இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சந்தோஷ் தயாநிதி இசையில் உருவான இந்த பாடலுக்கு ஏ பா ராஜா பாடல் வரிகளை எழுதி இருந்தார். முற்றிலும் திருவிழா செட்டப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்திருந்தார். கலர்ஃபுல்லாக வெளியான குட்டி பட்டாஸ் பாடல் இணையதளத்திலும் செம கலக்கு கலக்கி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகச் சிறந்த ஆல்பம் பாடலாக குட்டி பட்டாஸ் உள்ளது
யாத்தி யாத்தி
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான பாடல் யாத்தி யாத்தி. கெளதம் ஜார்ஜ் இயக்கத்தில் அபிஷேக் சி எஸ் இசையில் உருவான இந்தப் பாடல் பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் கோரியோகிராஃப் செய்திருந்தார். யாசின் நாசர், அனுராதா ஸ்ரீராம், அபிஷேக் சி எஸ் ஆகியோர் இப்பாடலை பாடி இருந்தனர். ராம் கணேஷ் பாடல் வரிகளை எழுதி இருந்தார். துள்ளலான இசையில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் காதல் வரிகளில் உருவான இந்தப் பாடலில் அஸ்வினுக்கு ஜோடியாக ஹர்ஷதா விஜய் நடித்து இருந்தார். இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த யாத்தி யாத்தி பாடல் 2021ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த ஆல்பம் பாடலாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!