2021ல் படுதோல்வி அடைந்த முன்னணி நடிகர்களின் 4 திரைப்படங்கள்!

சென்னை : கொரோனா பரவல் காரணமாக பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும் குறிப்பிடத்தக்க முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது

அவ்வாறு வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

அவ்வாறு எதிர்பார்ப்புடன் ஓடிடி மற்றும் சில படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 4 திரைப்படங்களை இங்கு நாம் காண்போம்.

1) ஜகமே தந்திரம்

1) ஜகமே தந்திரம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தியா மற்றும் லண்டனில் இதில் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி,ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருக்க நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது

2) லாபம்

2) லாபம்

இயற்கை, ஈ,புறம்போக்கு என்கிற பொதுவுடமை என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சமத்துவ அரசியலைப் பேசி வந்த எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இணைந்து திரைப்படம் லாபம். மிகச் சிறந்த இயக்குனர் மிகச் சிறந்த நடிகர் என பெரும் எதிர்பார்ப்பில் வெளியான லாபம் திரைப்படம் முழுவதும் விவசாயத்தையும் கார்ப்பரேட் அரசியலையும் பற்றி பேசிக் கொண்டே இருப்பதால் ரசிகர்களை இந்த படம் திருப்திப் படுத்தவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லாபம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

3) பூமி

3) பூமி

ரோமியோ ஜூலியட், போகன் என இரண்டு முறை கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற ஜெயம்ரவி, இயக்குனர் லக்ஷ்மண் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பூமி . முக்கியமாக விவசாயத்தை பற்றி பேசும் படமாக உருவானது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவந்த பூமி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றி பேசும் பூமி வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்களை திரைப்படமாக எடுத்து வைத்து இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எழுந்ததை அடுத்து இந்தத் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

4)அரண்மனை 3

4)அரண்மனை 3

அரண்மனை 1 மற்றும் 2 மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 உருவானது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்தில் ஆர்யா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக வெளியான அரண்மனை 3 பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வி அடைந்தது. நட்சித்திர பட்டாளம் மட்டும் பத்தாது அதையும் தாண்டி கதை மக்களை ஈர்க்க வில்லை என்றால் இப்படி தான் நடக்கும் என்று புரியவைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X