யுவன் 100... கவுரவப்படுத்த கைகோர்த்த 5 முன்னணி இசையமைப்பாளர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இன்றைக்கு யுவன் சங்கர் ராஜாதான். படங்களின் எண்ணிக்கை, வெற்றிக் கணக்கு, ஹிட் பாடல்கள் என்று பல விதத்திலும் இளையராஜாவின் 'இளைய'ராஜா தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
அதே ராசியான பஞ்சு அருணாச்சலத்தின் அரவிந்தனில் 'தங்கச் சூரியனே'... என இசைப் பயணம் தொடங்கிய யுவன் இன்று தொட்டது பொன்னாகும் நேரம்.

100வது படம்
அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி, தம்பி யுவனின் இசையில் கமககமவெண மணக்கிறது. பாடல்களைக் கேட்டவர்கள் யுவனுக்கு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். யுவனின் 100வது படம் இது.

இளையராஜா, கங்கை அமரனுக்குப் பிறகு
இசைஞானி இளையராஜா குடும்பத்தில், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரைத் தொடர்ந்து 100 படங்களுக்கு இசையமைத்த பெருமையும் இந்த படத்தின் மூலம் யுவனுக்கு கிடைத்துள்ளது. இளம் இசையமைப்பாளர்களில் செஞ்சுரி போட்ட பெருமையும் யுவனுக்கு உண்டு.

நட்பு
திரையுலகில் யுவனுக்கு எல்லோரும் நண்பர்கள்தான். போட்டி இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் யாரையும் சொல்ல முடியாது. அனைவருடனும் நட்பாகப் பழகும் யுவனுக்கு புதிய கவுரவத்தைத் தந்திருக்கின்றனர் சக இசையமைப்பாளர்கள்.

4 முன்னணி இசையமைப்பாளர்கள்
யுவனின் 100வது படம் என்றும் மறக்க முடியாத இனிய நினைவாக நிலைக்க 4 முன்னணி இசையமைப்பாளர்கள் யுவனுடன் கைகோர்த்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.
விஜய் ஆண்டனி, இமான், ஜீ.வி.பிரகாஷ், தமன் ஆகியோர்தான் அந்த நான்கு இசையமைப்பாளர்கள். இவர்கள் யுவனுடன் சேர்ந்து ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்கள்.

முதல் முறை
தமிழ் சினிமாவிலேயே முதன்முதலாக ஒரு பாடலுக்கு ஐந்து முன்னணி இசைமையப்பாளர்கள் ஒன்றாக இணைந்து பாடலை அமைத்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் 5 இசையமைப்பாளர்கள் ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











