2021ல் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான சிறந்த 4 திரைப்படங்கள்!
சென்னை : கலர்ஃபுல்லான கமர்சியல் படங்களுக்கு மத்தியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது
முன்னணி இயக்குனர்கள், இளம் இயக்குனர்கள் என பலரும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்
அந்தவகையில் 2021இல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வெளியான மிகச்சிறந்த 4 திரைப்படங்களை இங்கு நாம் காண்போம்.

சார்பட்டா பரம்பரை
1970களில் வடசென்னையை கலக்கிய குத்துச்சண்டை விளையாட்டுக்கு பெயர்போன சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என பல பரம்பரைகளை பற்றிய பலரும் அறியப்படாத தகவல்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சேகரித்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய இருந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, துஷாரா விஜயன்,கலையரசன், பசுபதி,ஜான் விஜய், ஜான் கொக்கின், சபீர், சந்தோஷ் பிரதாப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்க உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
Recommended Video

ஜெய் பீம்
தனது ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசம் காட்டி முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு படத்திலும் மெனக்கெடுவதில்லை சூர்யாவுக்கு நிகர் சூர்யா மட்டுமே என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நடிகர் சூர்யாவின் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்திருந்த திரைப்படம் ஜெய் பீம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் பெரும்பாலான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ரமேஷ் ராவ் எம்எஸ் பாஸ்கர் என அனைவரது நடிப்பும் அனைவரையும் வியக்க வைத்தது

தலைவி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான தலைவி திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். கட்சித் தலைவர் எம் ஜி ஆரின் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி மிக கச்சிதமாக இப்படத்தில் பொருந்தி இருப்பார். இயக்குனர் பா விஜய் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பாராட்டுக்களை பெற்றது

கர்ணன்
பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். தனுஷ்,ரஜிஷா விஜயன்,லால் ,கௌரி கிஷான் என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்திற்காக ஒரு கிராமத்தையே பிரமாண்டமாக செட் போட்டு அமைத்து படமாக்கப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கியது.


Click it and Unblock the Notifications











