2021ல் வெளியான மிகச்சிறந்த 4 த்ரில்லர் படங்கள்!
சென்னை : மலையாள படங்களுக்கு இணையாக தமிழிலும் த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன
அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு வித்தியாசமான கதைக்களத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.
2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான மிகச்சிறந்த த்ரில்லர் திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

திட்டம் இரண்டு
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான திரைப்படம் திட்டம் இரண்டு. சின்னத்திரை நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகாத சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திட்டம் இரண்டு கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்தது. புதுமையான கதைக்களம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் த்ரில்லர் காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் வியக்கவைத்த திட்டம் இரண்டு 2021ல் வெளியான மிகச் சிறந்த திரைப்படமாக உள்ளது

லிப்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் கவின் நடித்த திரைப்படம் லிப்ட். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருந்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லிப்ட் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஒரே ஒரு அலுவலகம் மற்றும் அதிலுள்ள லிப்ட் இதற்குள்ளாகவே ஒரு த்ரில்லர் படத்தை எடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் இயக்குனர் வினித் வரபிரசாத். 2021ல் வெளியான மிகச்சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக லிப்ட் கொண்டாடப்பட்டது

வனம்
8 தோட்டாக்கள்,ஜீவி, கேர் ஆப் காதல் என தனது ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் வனம். அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் அட்டகாசமான த்ரில்லர் கதை களத்தில் பூர்வகுடி மக்களின் வாழ்வியலை பற்றியும் காடுகளைப் பற்றியும் பேசியுள்ளது வனம். 2021 ஒன்றில் வெளியான மிகச்சிறந்த திரை படங்களில் ஒன்றாக உள்ளது
Recommended Video

அன்பிற்கினியாள்
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரெளத்திரம், ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்து பிரமாத படுத்தி இருப்பார். மிகச்சிறந்த தந்தை-மகள் பாசத்தில் த்ரில்லர் கதை களத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவரது பாராட்டுக்களையும் வெற்றி பெற்று 2021இல் வெளியான மிகச்சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டது.


Click it and Unblock the Notifications











