ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க!

சென்னை: டிரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸ் ஆகியவை எந்தெந்த நடிகைகளுக்கு பக்காவாக சூட்டாகிறது என்பது குறித்த ஒரு தொகுப்பை காணலாம்..

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். நடிகைகள் தங்களுக்கு ஏற்ற கதையை சரியாக தேர்வு செய்தால் மட்டுமே போட்டிகள் நிறைந்த இந்த துறையில் ஜொலிக்க முடியும்.

மாடர்ன் பெண்ணாக நடிப்பதாக இருந்தாலும் சரி, பாரம்பரிய உடையில் நடிப்பதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு செட்டானால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். பெரும்பாலும் நடிகைகள் பலரும் இரண்டிலுமே கலக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

பாரம்பரிய உடை

பாரம்பரிய உடை

அந்த வகையில் மாடர்ன் மற்றும் பாரம்பரிய உடையில் பர்ஃபெக்ட்டாக இருக்கும் டாப் நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அனைத்து நடிகைகளுமே இரண்டிலும் கலக்கியிருக்கிறார்கள். அவற்றில் திரிஷா முதல் சமந்தா வரை உள்ள 5 நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்..

சாமி..

சாமி..

தமிழ் சினிமாவில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக கொலோச்சி வரும் நடிகை திரிஷா மாடர்ன் உடையிலும் சரி, ட்ரெடிஷ்னல் உடையிலும் சரி பொருத்தமாக இருப்பார். பல படங்களில் அவர் மாடர்னாக நடித்துள்ள நிலையில் ட்ரெடிஷ்னல் லுக்கில் நடித்த சாமி, எனக்கும் உனக்கும், கில்லி, உள்ளிட்ட படங்களில் ட்ரெடிஷ்னலில் கலக்கியிருப்பார். அதேபோல் கமலின் தூங்காவனம் படத்தில் முழுக்க முழுக்க மேற்கத்திய உடையில் பட்டைய கிளப்பியிருப்பார்.

நயன்தாரா..

நயன்தாரா..

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாராவும் மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடையில் அசத்தியிருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல சறுக்கல்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த ரோலாக இருந்தாலும் கச்சிதமாக நடித்து விடுகிறார். அந்த வகையில் அவர் ட்ரெடிஷ்னல் லுக்கில் வந்த யாரடி நீ மோகினி, அறம், விஸ்வாசம், தர்பார் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது. ஐரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நயன்தாரா ஒரு ரோலில் மாடர்ன் பெண்ணாகவும் மற்றொன்றில் ட்ரடிஷ்னலாகவும் மிரளவிட்டிருப்பார்.

தமன்னா..

தமன்னா..

நடிகை தமன்னா நடிப்பு மட்டுமின்றி நடனம் ஆக்ஷன் என அனைத்திலும் தனது திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு நடிகை. தனது விடாமுயற்சியால் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள தமன்னா, கண்ணே கலைமானே, தர்மதுரை ஆகிய படங்களிலும் ட்ரெடிஷ்னல் லுக்கில் அசத்தியிருப்பார். தேவி படத்தில் மாடர்ன் மற்றும் கிராமத்து பெண்ணாக நடித்தார் தமன்னா. ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான அந்த படம் தமன்னாவின் நடிப்பு பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

காஜல் அகர்வால்..

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வால் இதுதான் என்றில்லாமல் கிடைக்கும் கேரக்டரில் எல்லாம் பிச்சு உதறி ஸ்கோர் செய்து வரும் ஒரு நடிகை. அஜித், விஜய், கார்த்தி, விஷால், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் காஜல் அகர்வால். ஆல் இன் ஆல் அழகுராஜா, விவேகம் உள்ளிட்ட படங்களில் ட்ரெடிஷ்னல் லுக்கில் நடித்துள்ளார். துப்பாக்கி படத்தில் ஸ்போர்ட்ஸ் கேர்ள் மற்றும் மாடர்ன் பெண்ணாக நடித்து அலற விட்டிருப்பார். மாடர்ன் மற்றும் ட்ரெடிஷ்னல் இரண்டுமே செட்டாகும் ஒரு நடிகையாக வலம் வருகிறார் காஜல்அகர்வால்.

சமந்தா..

சமந்தா..

நடிகை சமந்தாவும் மாடர்ன் மற்றும் டிரெடிஷ்னல் உடையில் அசத்தும் ஒரு நடிகை. இரண்டுமே அவருக்கு பர்ஃபெக்ட்டாக செட்டாகும். நடிகை சமந்தா, தங்கமகன், 24, சீமராஜா, தெறி ஆகிய படங்களில் பட்டைய கிளப்பியிருப்பார். அதேபோல் அஞ்சான், மெர்சல் உள்ளிட்ட படங்களில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார். இதேபோல் தெலுங்கு படங்களிலும் இரண்டிலும் பிச்சு உதறி வருகிறார் சமந்தா.

கமெண்ட்

கமெண்ட்

இவர்கள் மட்டுமின்றி ஆண்ட்ரியா, நித்யாமேனன், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் இரண்டிலும் அட்டாகசமாய் இருப்பார்கள். இவர்கள் அல்லாமல் பாரம்பரிய உடை மற்றும் மேற்கத்திய உடைகளில் உங்களின் மனதை கவர்ந்த நாயகிகள் இருப்பின், அவர்களின் பெயர்களை கமெண்ட் செய்து எங்களுடன் பகிருங்கள்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X