For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாஸ்.. கிளாஸ்.. சைக்கோ வில்லன்கள்.. 2020ல் ரசிகர்களை அலற விட்ட வில்லாதி வில்லன் யார்?

  |

  சென்னை: 2020ம் ஆண்டில் ரசிகர்களை அலறவிட்டும், ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தும் பிரபலமான டாப் 5 வில்லன்கள் பட்டியலை இங்கே காண்போம்.

  வில்லன்கள் இருக்கும் வரை தான் ரசிகர்கள் ஹீரோக்களை ரசிப்பார்கள். எந்த அளவுக்கு படத்தில் பவர்ஃபுல் வில்லன் இருக்கிறாரோ அந்த அளவுக்கு படம் சூப்பர் ஹிட் ஆகும் என்கிற கமர்ஷியல் ஃபார்முலா இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்களில் வொர்க்கவுட் ஆகி உள்ளது.

  வெப் சீரிஸில் செம பிசி.. யு-டர்ன் இயக்குனரின் ஃபேன்டஸி த்ரில்லரில் ஹீரோயின் ஆன அமலா பால்! வெப் சீரிஸில் செம பிசி.. யு-டர்ன் இயக்குனரின் ஃபேன்டஸி த்ரில்லரில் ஹீரோயின் ஆன அமலா பால்!

  வில்லனே இல்லாமல் சமூகமே வில்லனாகவும் திரைக்கதையே வில்லனாகவும் இருந்த சில படங்களும் இந்த ஆண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  5. சைக்கோ - ராஜ்குமார் பிச்சுமணி

  5. சைக்கோ - ராஜ்குமார் பிச்சுமணி

  ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ஏகப்பட்ட சைக்கோ கொலைகாரர்களை மையமாக வைத்து படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு பெண்குயின், சைக்கோ என இரு தமிழ் படங்கள் அந்த ஜானரில் வெளியாகின. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தில் சைக்கோ வில்லனாக ராஜ்குமார் பிச்சுமணி மிரட்டி இருந்தார். அதிலும் ஒரு ஷாட்டில் முழு நிர்வாணமாக நடித்து ஷாக் கொடுத்தார்.

  4. சைலன்ஸ் – மாதவன்

  4. சைலன்ஸ் – மாதவன்

  ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நெகட்டிவ் ஷேடில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சஸ்பென்ஸ் வில்லனாக நடித்திருந்த படம் சைலன்ஸ். இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் வெளியான இந்த படத்தில் மாதவன் தான் வில்லன் என்கிற சஸ்பென்ஸ் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கும்.

  3. மாஃபியா – பிரசன்னா

  3. மாஃபியா – பிரசன்னா

  இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மாஃபியா திரைப்படத்தில் செம கிளாஸான வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்து கலக்கி இருப்பார். சிங்கம் vs நரி கதையாக அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வியக்க வைக்கும். இறுதியாக செம ட்விஸ்ட்டாக, பிரசன்னாவை விட பெரிய வில்லன் டெக்ஸ்டர் எனும் அருண் விஜய் என முடித்திருப்பார்கள். இரண்டாம் பாகம் வருமா?

  2. மூக்குத்தி அம்மன் – அஜய் கோஷ்

  2. மூக்குத்தி அம்மன் – அஜய் கோஷ்

  விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜய் கோஷ் அடிக்கும் ஒவ்வொரு அடியும் ரசிகர்களுக்கே வலிக்கும் படி அவ்வளவு மிரட்டலாக இருக்கும். அதற்கு பிறகு காமெடி ட்ரை பண்ண ஆரம்பித்த அஜய் கோஷ், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் பகவதி பாபா எனும் கார்ப்ரேட் சாமியாராக நடித்து கடவுளுக்கே வில்லனாக மாறிவிட்டார். அவருடைய நடிப்பில் வில்லத்தனம் அதிகம் இல்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்தின் வில்லத்தனத்தின் ஆழம் அதிகம்.

  சூரரைப் போற்று – பரேஷ் ராவல்

  சூரரைப் போற்று – பரேஷ் ராவல்

  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. கோல்டன் குளோபில் திரையிடப்படும் அளவுக்கு அந்தஸ்த்தை பெற்றுள்ள அந்த படத்தில் செம கிளாஸ் வில்லனாக பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடித்திருப்பார். முதலாளித்துவத்தின் முகவரியாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருப்பார் பரேஷ் ராவல்.

  ஸ்பெஷல் ஐட்டம்

  ஸ்பெஷல் ஐட்டம்

  இந்த படட்டியலில் ஸ்பெஷல் ஐட்டமாக சமீபத்தில் சமூக வலைதளங்களை மிரட்டி வருவது பாவக் கதைகள் ஆந்தாலஜியில் வில்லனாக மிரட்டிய ஜாபர் சாதிக் தான். விக்னேஷ் சிவனின் லவ் பண்ணா உட்றணும் கதையில் எங்கிருந்து இவரை தேடிப் பிடித்தார் விக்னேஷ் சிவன் என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. ஆணவக் கொலைகள் பண்ணுவதில் ஸ்பெஷலிஸ்டாக நடித்து பயமுறுத்துகிறார். நிறைய வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கிறோம்.

  English summary
  Top 5 best Villain of 2020 in Tamil Cinema. Soorarai Pottru actor Paresh Rawal spotted the top place in this list.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X