முதல்ல தம்பி வருவான்.. அடுத்து பாடி வரும்.. இது செமல்ல!

Recommended Video

இது பிகே வழங்கும் டாப் 5 பீட்ஸ் மச்சி...!

சென்னை: இது பிகே வழங்கும் டாப் 5 பீட்ஸ் மச்சி...!

நயன்தாரா இப்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். தெரிந்த செய்திதான். அடுத்து நெற்றிக்கண் என்ற படத்திலும் நடிக்கிறார். இது தி பிளைன்ட் படத்தின் ரீமேக்.

top 5 fiml updtes from kollywood

விக்னேஷ் சிவன் தான் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இந்தியிலும் கொண்டு வருகிறார்கள். நெற்றிக்கண் படத்திலும் நயன்தாராவுக்கு வித்தியாசமான கேரக்டராம்.

நயன்தாரா குறித்த இன்னொரு கொசுறுச் செய்தி. போனி கபூரை சமீபத்தில் சந்தித்தார் நயன்தாரா. எதற்காக என்றால் அஜீத் நடித்து போனி கபூர் இயக்கும் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாராம். பெண் போலீஸ் அதிகாரி வேடமாம். செம கெட்டப்பாம். அதிரடி வேடமாம்.

தளபதி 64 படத்தில் ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து உருவாக்குகிறார்கள். இந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன் நம்மவர் என்று சொல்கிறார்கள். அதாவது கமல்ஹாசன் புரபசர் வேடத்தில் நடித்த படம்தான் நம்மவர். தளபதி 64 படத்திலும் புரபசராக வருகிறார் விஜய்.

இப்படத்தின் வசனத்தில் நம்மவர் பட சாயல் தெரியவும், கமல்ஹாசனிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என்று விஜய் சொல்ல, இயக்குநரும் கமலை நேரில் பார்த்து பேசியுள்ளார். அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட கமல், தாராளமாக பண்ணுங்க என்று உரிமையையும் கொடுத்து விட்டாராம். இதனால் நம்மவர் படம் மாதிரி இருக்கேன்னு யாராச்சும் நினைச்சா அதற்குக் காரணம் நம்மவரேதான்!

தம்பி படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது. வித்தியாசமான டீசராக இது இருந்தது. அதேபோல இன்னொரு படம் தி பாடி. இந்த இரண்டு படத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆமாங்க, இந்த இரண்டு படங்களையும் இயக்கியுள்ளது மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப்தான். ஒரே நேரத்தில் மாறி மாறி இரு படங்களையும் இயக்கியுள்ளார் நம்ம ஜித்து.

முதல்ல தம்பி படம் ரிலீஸாகுதாம். அடுத்,து பாடி வருதாம்.. இரண்டையும் சேர்த்து ரசிப்போம்.. என்னா இப்போ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X