twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021ல் பெரிய நடிகர்கள் இல்லாமல் வெற்றி பெற்ற 5 தமிழ் படங்கள்!

    |

    சென்னை: பெரும்பாலும் சிறிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை பெறுவதில்லை.

    ஆனால் திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் பல.

    அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெரிய நடிகர்கள் இல்லாமல் வெளியாகி சக்கைபோடு போட்ட 5 சிறந்த தமிழ் படங்களை இங்கு நாம் காண்போம்.

    சபாபதி படத்தின் ஒளிபரப்பை அறிவிக்காத நடிகர் சந்தானம் ... கலர்ஸ் டிவியில் வேற லெவல் பிரமோ! சபாபதி படத்தின் ஒளிபரப்பை அறிவிக்காத நடிகர் சந்தானம் ... கலர்ஸ் டிவியில் வேற லெவல் பிரமோ!

    லிஃப்ட்

    லிஃப்ட்

    சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த கவின் வெள்ளித்திரையில் இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோவாக நடித்த திரைப்படம் லிஃப்ட் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அமிர்தா ஐயர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் திரில்லர் கதையில் உருவானது. மிகக் குறைந்த நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆபீஸ் மற்றும் அதிலுள்ள லிஃப்டை மட்டுமே வைத்து இப்படி ஒரு ஹாரர் படத்தை கொடுக்க முடியுமா என்று அனைவரையும் பிரமிக்க வைத்த இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    ஓமணப் பெண்ணே

    ஓமணப் பெண்ணே

    தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உயர்ந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகச் சிறந்த காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

    மண்டேலா

    மண்டேலா

    காமெடியனாக அறிமுகமாகி இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வரும் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக விளங்கி வருகிறார். ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து இவரை திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவிக்கிறது. ஒரே ஒரு ஓட்டு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை காமெடி கலந்து கூறியிருந்த மண்டேலா அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றதோடு மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது. 2021 இல் வெளியான தமிழ் படங்களில் ஆகச் சிறந்த திரைப்படமாக மண்டேலா கொண்டாடப்பட்டது

    திட்டம் இரண்டு

    திட்டம் இரண்டு

    பொதுவாக மலையாள சினிமாக்களில் மட்டுமே கண்டுவந்த தனித்துவமான கதைகளைக் கொண்ட படங்களை தமிழிலும் இயக்கலாம் என்று நிரூபித்து காட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார். பெரும் போராட்டத்திற்கு பின்னர் இவர் இயக்கிய திட்டம் இரண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் லீட் ரோலில் நடித்து இருக்க கொஞ்சம் கூட யூகிக்க முடியாது கிளைமேக்ஸை வைத்து அனைவரையும் அசர வைத்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுமையாக இருந்த திட்டம் இரண்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வெற்றி பெற்றது.

    என்னங்க சார் உங்க சட்டம்

    என்னங்க சார் உங்க சட்டம்

    அறிமுக இயக்குனர் பிரபு ஜெயராமன் இயக்கத்தில் ஆர் எஸ் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம். சமுதாயத்தில் இன்றளவும் இருக்கும் சாதி மற்றும் மத பாகுபாடுகளை பற்றியும் அனைத்து மதத்திலும் அனைத்து சாதியிலும் ரிசர்வேஷன் என்ற ஒன்று எவ்வாறெல்லாம் கைகொடுக்கிறது எவ்வாறெல்லாம் கை கொடுக்க மறுக்கிறது என்பதை ரத்தின சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் கூறியிருந்த இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி மிகச் சிறந்த திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

    English summary
    Top 5 Hit Movies Without a Big Star in Tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X